சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எரிந்த நிலையில் இளம்பெண் உடல்: போலீஸ் விசாரணை

Added : ஆக 04, 2021
Share
Advertisement
திருவெண்ணெய்நல்லுார்-திருவெண்ணெய்நல்லுார் அருகே கருகிய நிலையில் கிடந்த பெண் உடல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சேமங்கலம் மலட்டாற்றில் எரிந்த நிலையில் பெண் உடல் கிடப்பதாக திருவெண்ணெய்நல்லுார் போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது.அதன்பேரில், டி.எஸ்.பி., பழனிசாமி, இன்ஸ்பெக்டர் பழனி, சப்

திருவெண்ணெய்நல்லுார்-திருவெண்ணெய்நல்லுார் அருகே கருகிய நிலையில் கிடந்த பெண் உடல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சேமங்கலம் மலட்டாற்றில் எரிந்த நிலையில் பெண் உடல் கிடப்பதாக திருவெண்ணெய்நல்லுார் போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது.அதன்பேரில், டி.எஸ்.பி., பழனிசாமி, இன்ஸ்பெக்டர் பழனி, சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, விசாரணை நடத்தினர்.மேலும், கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர் ராஜிவ் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.30 வயது மதிக்கதக்க பெண் என்பதும், அவர் யார் என்ற விபரமும் தெரியவில்லை. மேலும் உடல் அருகே கிடந்த 6ம் நெம்பர் செருப்பு, எரிந்த நிலையில் மொபைல் போன், ஒன்றரை அடி நீளம் கொண்ட தடி, ேஹண்ட் பேக், சீப்பு, செயின், சாவி, ரோஸ் கலர் பிளவுஸ் உள்ளிட்டவைகளை போலீசார் கைப்பற்றினர்.உடலை, பிரேத பிரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து, இளம்பெண் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டாரா அல்லது எரித்துக் கொலை செய்யப்பட்டாரா என விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X