பொது செய்தி

தமிழ்நாடு

எலிபேஸ்ட் சாப்பிட்டு மயங்கிய கிராம பெண் உதவியாளர்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை-கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பின்னல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகவேல் மனைவி விஜயகுமார், 37; அதே கிராமத்தில் வி.ஏ.ஓ.,வாக பணிபுரிந்து வருபவர் பிரசாந்த்.விஜயகுமாரி, சரியாக பணிக்கு வராமல், தாமதாக வந்ததால் பிரசாந்த் அவரை கண்டித்துள்ளார்.அவர், தாமதமாக வருவது குறித்து வருவாய் ஆய்வாளர் புவனேஸ்வரியிடம் புகார்

உளுந்துார்பேட்டை-கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பின்னல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகவேல் மனைவி விஜயகுமார், 37; அதே கிராமத்தில் வி.ஏ.ஓ.,வாக பணிபுரிந்து வருபவர் பிரசாந்த்.விஜயகுமாரி, சரியாக பணிக்கு வராமல், தாமதாக வந்ததால் பிரசாந்த் அவரை கண்டித்துள்ளார்.அவர், தாமதமாக வருவது குறித்து வருவாய் ஆய்வாளர் புவனேஸ்வரியிடம் புகார் தெரிவித்துள்ளார்.நேற்று மாலை வருவாய் ஆய்வாளர் புவனேஸ்வரி, கிராம உதவியாளர் விஜயகுமாரியிடம் விசாரணை நடத்தினார்.பிரசாந்த் தனக்கு பணிச் சுமை அதிகமாக வழங்கி மனஉளைச்சலை ஏற்படுத்துகிறார் என தெரிவித்த அவர் மனமுடைந்து, எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.உளுந்துார்பேட்டை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் துறை ரீதியாக விசாரணை நடத்தி வருகிறார்.மேலும், எலவனாசூர்கோட்டை போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X