ஐ.டி., நிறுவனங்கள் ஓட்டமா? அமைச்சருக்கு 'மாஜி' பதிலடி!

Updated : ஆக 06, 2021 | Added : ஆக 04, 2021 | கருத்துகள் (12) | |
Advertisement
''அ.தி.மு.க., அரசின் அணுகுமுறை சரியில்லாததால், அதிக முதலீடுகள் கொண்ட பல ஐ.டி., நிறுவனங்கள், தமிழகத்தில் இருந்து வெளியேறிஉள்ளன. ''இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது,'' என, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம் சாட்டினார். நிறைய தவறுகள்அவர் கூறியதாவது:தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், முன்பு எந்தந்த துறைகளில், எப்படியெல்லாம்
 ஐ.டி., நிறுவனங்கள் ஓட்டமா? அமைச்சர்,மாஜி பதிலடி

''அ.தி.மு.க., அரசின் அணுகுமுறை சரியில்லாததால், அதிக முதலீடுகள் கொண்ட பல ஐ.டி., நிறுவனங்கள், தமிழகத்தில் இருந்து வெளியேறிஉள்ளன. ''இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது,'' என, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம் சாட்டினார்.


நிறைய தவறுகள்அவர் கூறியதாவது:தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், முன்பு எந்தந்த துறைகளில், எப்படியெல்லாம் தவறு நடந்திருக்கிறது என்பதை கண்டறிந்திருக்கிறோம். தகவல் தொழில்நுட்பத் துறையைப் பொறுத்தவரை, நிறைய தவறுகள் நடந்திருக்கின்றன. தமிழகத்தில், ஆயிரக்கணக்கான ரூபாய் முதலீட்டில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை துவங்கிய, பல நிறுவனங்கள், ஏற்கனவே இருந்த அரசின் தவறான அணுகுமுறைகளால், இங்கிருந்து வெளியேறி இருக்கின்றன. இதனால், இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர். அரசுக்கும் ஏகப்பட்ட வருவாய் இழப்பு ஏற்பட்டுஇருக்கிறது. சரியான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தித் தரப்படவில்லை. எல்லா நிலைகளிலும் எதிர்பார்ப்பு இருந்ததோடு, வேகமான நடவடிக்கைகளும் இல்லாததால், தமிழகமே வேண்டாம் என, இங்கிருந்து புறப்பட்டு விட்டனர்.

அது தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.அந்நிறுவனங்களை, மீண்டும் தமிழகத்துக்கு அழைத்து வரும் முயற்சியில், தற்போதைய அரசு இறங்கி இருக்கிறது. விரைவில், தகவல் தொழில்நுட்பத் துறையில், தமிழகத்தில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம். பழைய ஆட்சி காலத்தில் நடந்த தவறுகளெல்லாம் முழுமையாக களையப்படும்.
இவ்வாறு மனோ தங்கராஜ் கூறினார்.இது குறித்து, அ.தி.மு.க., அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த உதயகுமார் கூறியதாவது:கொரோனா காலம் இது. வீட்டில் இருந்து தான், 'ஆன்லைன்' மூலம் பலரும் பணியாற்றுகின்றனர். இதற்கான இணைய கட்டமைப்பு வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது, அ.தி.மு.க., ஆட்சி தான்.


அடிப்படை கட்டமைப்புதகவல் தொழில்நுட்பத் துறைக்கென தொழில் முதலீட்டுக் கொள்கைகளை வெளியிட்டு, பல தொழில் நிறுவனங்கள் தமிழகத்துக்கு வந்தன. இன்றும் தங்கள் தொழிலைத் தொடருகின்றன. சென்னையின், பழைய மகாபலிபுரம் சாலையின், இரு மருங்கிலும் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. அவை அனைத்துமே, அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் அமைந்தவை தான். சேலம், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட, பல நகரங்களிலும் ஐ.டி., நிறுவனங்கள் செயல்படுவதற்கான, அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட, பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. தமிழகத்தில் இருந்து, எந்த தொழில் நிறுவனமும், வேறு எங்கும் செல்லவில்லை. எந்த நிறுவனம் இடம் பெயர்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டு சொன்னால் விளக்கம் அளிக்கலாம்.


இணைய வசதிஅதை விடுத்து பொத்தாம் பொதுவாக பேசுவது, அமைச்சர் மனோ தங்கராஜ், துறையைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ளவில்லை என்பது தான் அர்த்தம். தகவல் தொழில்நுட்பத் துறை மூலம், பிளஸ் ௧ மாணவர்களுக்கு, இலவச 'லேப்டாப்' வழங்கப்பட்டது. அதைப் பயன்படுத்த, இணைய வசதியும் செய்து தரப்பட்டது. அவர்களுக்கு வழங்கப்பட்ட, 'டேட்டா கார்டு' காலாவதியாகி விட்டது. இன்றைக்கு படிப்பு முழுக்க ஆன்லைன் வகுப்பு என்றாகி விட்ட நிலையில், அரசு, டேட்டா கார்டை புதுப்பித்து தராதது ஏன்? இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
06-ஆக-202102:51:13 IST Report Abuse
BASKAR TETCHANA பல கம்பெனிகளுக்கு தெரியும் பெரிய திருடன் மறைந்து விட்டான் இப்போது அப்பன் மகன் என்று இரு திருடர்கள் வந்து இருக்கின்றனர். இவர்களை நம்பி நாம் போனால் இருப்பதும் போச்சு என்ற நிலை வரும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டனர். இருக்கிற கம்பெனிகளும் விரைவில் ஸ்டாலினுக்கு சிகப்பு கோடி காட்டி விட்டு பொய் விடும். இந்த தொழில் துறை மந்திரிக்கே தெரியாயாதி எதை எப்படி செய்வது என்று இவனெல்லாம் பேட்டி கொடுக்கிறான். ஜெய் ஹிந்த்.
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
10-ஆக-202109:08:22 IST Report Abuse
madhavan rajanமக்களுக்கு நாமம் போட்டு பல வசதிகளை கம்பெனிகளுக்கு செய்து கொடுத்து அதன் பங்குகளை தங்கள் குடும்பத்தின் பெயரில் வாங்கிக்குவிக்கும் நுட்பம் தெரிந்தவர்கள் தற்போதைய ஆட்சியாளர்கள். விவசாயிகளுக்கு மின்வெட்டு ஏற்படுத்தி தங்களுக்கு ஆதாரமான தொழிற்சாலைகளுக்கு அதிக மின்சாரம் வழங்கியவர்கள். சிறப்பான ஒரு விளம்பரம் மூலம் தொழிலை ஈர்த்துவிடுவார்கள். அப்போதுதான் அவர்களது குடும்பத்துக்கு ஆதாயம்....
Rate this:
Cancel
05-ஆக-202119:46:13 IST Report Abuse
அப்புசாமி பரவாயில்லை. மத்தியில் நேருவின் மீது பழி போடுவாங்க. இவுரு பாவம் கடந்த அரசை பழி சொல்கிறார். இப்பிடிப்பேசி பேசியே மத்திய அரசு மாதிரி 5 வருஷம் ஓட்டிருவாங்க.
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
10-ஆக-202109:09:26 IST Report Abuse
madhavan rajanஅப்போ மோடி அரசு முந்தைய ஆட்சியாளர்கள்மீது பழி போடக்கூடாதுன்னு சொன்னதெல்லாம் நாடகமா ஸ்டாலின்....
Rate this:
Cancel
maya - Junnagate,இந்தியா
05-ஆக-202117:33:38 IST Report Abuse
maya . எல்லாமே வெத்து வேட்டு. இவரால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X