குறைகளை கூறுவோம் தீர்வு காண்போம் //

Added : ஆக 05, 2021
Share
Advertisement
குப்பையால் சுகாதாரக்கேடுஸ்ரீவில்லிபுத்துார் கைகாட்டி கோயில் பஜார் வீதியில் ரோட்டோரம் கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதார கேடு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டுமசமுத்திரகுமார், ஸ்ரீவில்லிபுத்துார்.நடவடிக்கை எடுக்கப்படும்உடனடியாக துய்மை பணி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.பழனிகுரு, சுகாதார ஆய்வாளர், ஸ்ரீவி., நகராட்சி.தெருவிளக்கு வசதி இல்லைஏழாயிரம்

குப்பையால் சுகாதாரக்கேடு

ஸ்ரீவில்லிபுத்துார் கைகாட்டி கோயில் பஜார் வீதியில் ரோட்டோரம் கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதார கேடு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும
சமுத்திரகுமார், ஸ்ரீவில்லிபுத்துார்.

நடவடிக்கை எடுக்கப்படும்

உடனடியாக துய்மை பணி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.பழனிகுரு, சுகாதார ஆய்வாளர், ஸ்ரீவி., நகராட்சி.

தெருவிளக்கு வசதி இல்லை

ஏழாயிரம் பண்னை அருகே இ.எல்.ரெட்டியாபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மருதுபாண்டியர் நகரில் 20 ஆண்டுகளாக தெருவிளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் மிகவும் அவதிக்குள்ளாகிறோம்.
பொன்னுசாமி, மருதுபாண்டியர் நகர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

பி.டி.ஓ., கவனத்திற்கு கொண்டு சென்று தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.குட்டி, ஊராட்சி தலைவர் இ.எல்.ரெட்டியாபட்டி.

ரோடு போட வேண்டும்

சாத்துார் வெள்ளைக் கரை ரோட்டில் ஜல்லி கற்கள் பரப்பி பல மாதமாகிறது. ரோடு போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.கருப்பசாமி, சாத்துார்.

நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

ஒப்பந்தகாரரிடம் பேசி உள்ளேன். அடுத்த வாரம் ரோடு பணிகளை ஆரம்பிப்பதாக உறுதியளித்துள்ளார்.இளவரசன், நகராட்சி கமிஷனர், சாத்துார்.

நெடுஞ்சாலையில் குப்பை

ராஜபாளையம் வடக்கு தேவதானம் ஊராட்சி குப்பை தென்காசி தேசிய நெடுஞ்சாலை ஓரம் குவிக்கப்படுகின்றன. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.சுந்தரபாண்டியன், வடக்கு தேவதானம்.

நடவடிக்கை எடுக்கப்படும்

உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.தங்க மாரியம்மாள், ஊராட்சி தலைவி, வடக்கு தேவதானம்.

தேங்கி நிற்கும் கழிவு நீர்

காரியாபட்டி ஒன்றியம் குரண்டியில் ஊரையொட்டி அமைந்துள்ள டிரான்ஸ்பார்மரை சுற்றி கழிவு நீர் தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. அதை சரி செய்ய வேண்டும்.

நடவடிக்கை எடுக்கப்படும்

ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.சிவசக்தி, ஊராட்சி தலைவர், குரண்டி.

தேங்கி நிற்கும் சாக்கடை

விருதுநகர் ஆணிமுத்து விநாயகர் கோயில் தெரு சாக்கடை முறையாக சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர் கேட்டை ஏற்படுத்துகிறது.
செல்வமணி, விருதுநகர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

முறையாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.குருசாமி, சுகாதார ஆய்வாளர்.

செயல்படாத சுகாதார வளாகம்

சத்திர ரெட்டியபட்டி சுகாதார வளாகம் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது.தர்மராஜ், சத்திர ரெட்டியபட்டி.

நடவடிக்கை எடுக்கப்படும்
விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.மருதுராஜ், ஊராட்சி தலைவர்.

நாய் தொல்லை

திருத்தங்கல் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களால் சாலையில் செல்வோருக்கு அவதி ஏற்படுகிறது. அடிக்கடி வீதியில் செல்வோரை கடித்து விடுகிறது. இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.விமலா, திருத்தங்கல்.

நடவடிக்கை எடுக்கப்படும்
விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும்.பாண்டித்தாய், நகராட்சி கமிஷனர், திருத்தங்கல்

துார்வாரப்படாத சாக்கடை

சிவகாசி மேற்குரத வீதியில் சாக்கடை முறையாக துார்வாரப்படவில்லை. இதனால் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர் கேட்டை ஏற்படுத்துகிறது.ராஜசேகரன், சிவகாசி.

துார்வாரப்படும்
விரைவில் துார்வாரநடவடிக்கை எடுக்கப்படும்.பார்த்தசாரதி, நகராட்சி கமிஷனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X