பொது செய்தி

தமிழ்நாடு

இன்சூரன்ஸ் ஊழியர்கள் 'ஸ்டிரைக்'

Added : ஆக 05, 2021
Share
Advertisement
சென்னை:பொது காப்பீடு தேசியமயமாக்கல் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து, பொது இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்கள், ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்; இதனால் 400 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களான, 'நேஷனல், ஓரியன்டல், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்' ஆகிய நான்கு நிறுவனங்களில் ஒன்றை, தனியார் மயமாக்க மத்திய அரசு
 இன்சூரன்ஸ்  ஊழியர்கள் 'ஸ்டிரைக்'

சென்னை:பொது காப்பீடு தேசியமயமாக்கல் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து, பொது இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்கள், ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்; இதனால் 400 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களான, 'நேஷனல், ஓரியன்டல், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்' ஆகிய நான்கு நிறுவனங்களில் ஒன்றை, தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்தது.இது தொடர்பான பொது காப்பீடு தேசியமயமாக்கல் சட்ட திருத்த மசோதா - 2021, லோக்சபாவில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து, இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்கள், நாடு முழுதும் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலர் வெங்கடாசலம் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இது குறித்து, தென்மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்க பொதுச் செயலர் ஜி.ஆனந்த் கூறியதாவது:பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில், 51 சதவீத பங்குகள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற ஷரத்தை நீக்கி, 100 சதவீத பங்குகளை விற்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, 100 சதவீத பங்குகளை விற்றால், நிறுவனங்கள் தனியார் மயமாகிவிடும்.

இந்நிறுவனங்களில் பொதுமக்களின் சொத்து, 2 லட்சம் கோடி ரூபாய் உள்ளது. இதனால், பொதுத்துறை நிறுவனங்களின் பிரீமியம் வருவாயான 72 ஆயிரம் கோடி ரூபாயை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கிஉள்ளது.இதைக் கண்டித்து வேலை நிறுத்தம் செய்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X