ஆன்லைன் ரம்மி தடை ராமதாஸ் வலியுறுத்தல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன்' ரம்மி தடை ராமதாஸ் வலியுறுத்தல்

Added : ஆக 05, 2021
Share
சென்னை:'ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தில் உள்ள குறைகளை களைந்து, புதிய சட்டம் இயற்ற வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:'ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து, இயற்றப்பட்ட சட்டம் செல்லாது' என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்றப்பட்டதால், பலரும்

சென்னை:'ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தில் உள்ள குறைகளை களைந்து, புதிய சட்டம் இயற்ற வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:

'ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து, இயற்றப்பட்ட சட்டம் செல்லாது' என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்றப்பட்டதால், பலரும் மகிழ்ச்சியும், மன நிறைவும் அடைந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும் கூட, எந்த பயனும் கிடைக்காது. சட்டத்தில் உள்ள குறைகளை களைந்து, புதிய சட்டம் இயற்றுவது தான் சரியான தீர்வு. எனவே, சட்ட நிபுணர்கள், தகவல் தொழில்நுட்ப சட்ட வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். அவர்களின் பரிந்துரை பெற்று, புதிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X