கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோவில்களுக்கு தானமாக வழங்கிய பசுக்கள் விபரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : ஆக 05, 2021
Share
Advertisement
சென்னை:கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை, வயது விபரங்களை தாக்கல் செய்ய, அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்த மனு: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட, 100க்கும் மேற்பட்ட பசுக்களை, தனி நபர்களுக்கு அரசு வழங்கி உள்ளது. அடிமாடுகளாக, 25

சென்னை:கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை, வயது விபரங்களை தாக்கல் செய்ய, அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்த மனு: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட, 100க்கும் மேற்பட்ட பசுக்களை, தனி நபர்களுக்கு அரசு வழங்கி உள்ளது. அடிமாடுகளாக, 25 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்கப்பட்டுள்ளது.


கண்காணிக்க குழு

தனி நபர்களுக்கு பசுக்கள் வழங்க வகை செய்யும் அரசு உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். கோவில்களுக்கு வழங்கப்படும் கால்நடைகளை பாதுகாக்க, உரிய விதிகள் வகுக்க வேண்டும்.கடந்த 20 ஆண்டுகளாக கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க உத்தரவிட வேண்டும்; கால்நடைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க, குழு அமைக்க வேண்டும்.கோவில்களின் சொத்துக்கள் அரசின் சொத்துக்கள் அல்ல; அவற்றை மதம் சார்ந்த விஷயங்களுக்கு தவிர, மற்றவைக்கு பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


பசுக்கள் எண்ணிக்கை

மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது.கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட கால்நடைகளை முறையாக பராமரிக்கவும், தானம் வழங்கப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்து கொள்ளவும், நீதிபதிகள் அறிவுறுத்தினர்.தமிழகம் முழுதும் கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக் கள் எண்ணிக்கை; அவற்றின் வயது உள்ளிட்ட விபரங்களை தாக்கல் செய்ய, அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஐந்து வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X