பொது செய்தி

தமிழ்நாடு

சட்டசபையில் கருணாநிதி படம் 27 நாட்களில் உருவான ஓவியம்

Added : ஆக 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அறுபது ஆண்டுகளுக்கும் மேல், சட்டசபையில் ஒருவர் குரல் ஒலித்திருக்கிறது என்றால், அது முன்னாள் முதல்வர் கருணாநிதியுடையது. அவரது உருவப்படம் தமிழக சட்டசபையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் படத்தை வரைந்த ஓவியர், 'அரசு ஆர்ட்ஸ்' கோபி. அவர் அளித்த பேட்டி: என் தந்தை சுந்தரேசன், திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்தவர். பிறவி
 சட்டசபையில் கருணாநிதி படம்  27 நாட்களில் உருவான ஓவியம்

அறுபது ஆண்டுகளுக்கும் மேல், சட்டசபையில் ஒருவர் குரல் ஒலித்திருக்கிறது என்றால், அது முன்னாள் முதல்வர் கருணாநிதியுடையது. அவரது உருவப்படம் தமிழக சட்டசபையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் படத்தை வரைந்த ஓவியர், 'அரசு ஆர்ட்ஸ்' கோபி. அவர் அளித்த பேட்டி:

என் தந்தை சுந்தரேசன், திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்தவர். பிறவி ஓவிய கலைஞர். ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதியால், தந்தை உருவாக்கிய அரசு ஆர்ட்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து நடத்தி வருகிறேன்.


கெட்டுப் போகாது

தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் சட்டசபையில் கருணாநிதியின் உருவப்படம் வைக்க தீர்மானித்தனர். கருணாநிதியை ஓவியமாக வரையும் பொறுப்பு எங்கள் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது. இதற்காக, சட்டசபைக்கு எங்கள் குழுவினரை அழைத்து சென்றனர். அங்கு, எந்த இடத்தில் படம் அமைக்க வேண்டும் என்பதை காட்டினர். ஏற்கனவே 15 தலைவர்களின் படங்கள் அங்கு உள்ளன. அந்த படங்கள், 6 அடிக்கு, 4 அடி என்ற அளவில் இருந்தன. அதே அளவில் வேண்டும் என்றனர். ஒரு மாதத்தில் முடிக்க கூறினர்.

ஏற்கனவே வரையப்பட்ட தலைவர்களின் ஓவியங்கள், 'ஆயில் பேஸ்டல் கேன்வாஸ்' துணியில் தான் இருந்தன. அந்த துணியில் சிறப்பு, 'பெயின்ட்' மூலம் ஓவியம் வரையும்போது, அது 200 ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாது. உலகின் புகழ்பெற்ற ஓவியங்கள் அனைத்தும் இதுபோல் தான் வரையப்பட்டுள்ளன. இத்தகவலை கூறியதும், அதிகாரிகள் உடனே, 'ஓகே' கூறினர். முதல்வர் ஸ்டாலினும், 'அப்படியே செய்யலாம்' என, கூறி விட்டார்.

சட்டசபையில் உள்ள மற்ற படங்கள், நிற்கும் நிலையில் வரையப்பட்டவை என்பதால், கருணாநிதி படமும், 'அதேபோல் இருக்க வேண்டும்' என, கூறினர்.


கைவண்ணங்கள்

கருணாநிதிக்கு மிகவும் பிடித்த அவரது பேனா, புத்தகங்கள் நிறைந்த அலமாரி, உள் ஓவியமாக அவர் விரும்பி உருவாக்கிய கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, கைக்கடிகாரம் ஆகியவை ஓவியத்தில் இருக்க வேண்டும் என, ஸ்டாலின் விரும்பினார். இந்த ஓவியம் வரையும்போது பெயின்ட் காய்வதற்கு நான்கு நாட்களாகும். 'டார்க் கலர்' மற்றும் மங்கலான வண்ணம் என, பெயின்டுகளை மாற்றி மாற்றி வரையும் போது, பல நாட்கள் எடுக்கும். ஓவியத்தை முழுமையாக வரைந்து முடிக்க 27 நாட்கள் ஆகின.

எங்கள் குழுவில் 22 பேர் இருந்தனர். ஓவியத்தில் ஒவ்வொருவரின் கைவண்ணமும் இருக்கிறது. ஆளாளுக்கு ஒரு பணி செய்தனர். தவறுகளை திருத்த இருவர் இருந்தனர்.அவர்கள் வேலையே குற்றம் கண்டுபிடிப்பது தான். படம் வரையும் நிலையிலேயே, எங்கு தவறு இருக்கிறதோ அதை நுணுக்கமாக கணித்துச் சொல்வர்.அதை அவ்வப்போது நிவர்த்தி செய்து கொண்டே வந்தோம். ஓவியத்தை உற்று நோக்கினால், யானையின் மேல் கருணாநிதி கை வைத்திருப்பது போல இருக்கும்.

தமிழ் மொழியின் கம்பீரத்தையும், தமிழ் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பவர் கருணாநிதி என்பதையும் உணர்த்தும் வகையில், யானை சிலை மீது கை வைத்திருப்பது போல் ஸ்டாலின் வரைய சொன்னார்.அவர் வாழ்ந்த, சென்னை கோபாலபுரம் வீட்டிலும் யானை சிலை ஒன்று இருக்கிறது.


பாராட்டு



ஓவியத்தில் கதவு ஒன்று இடம்பெற்றிருக்கும். அந்த கதவு, ஓர் அறைக்குள் கருணாநிதி நிற்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். 'நுால்கள் நிறைந்த தன் வீடு தான் உலகம்' என, அடிக்கடி கருணாநிதி கூறுவார். அதையே தான் ஓவியமும் கூறுகிறது. கருணாநிதியின் படம், அவரது மொத்த வாழ்க்கையையும் கூறும்படி அமைக்கப்பட்டது.

குறிப்பாக ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். படம் வரைய முற்படும் முன், பெரிய படத்தின், 'மினியேச்சர்' வரைந்து, அதுபோல தான் பெரிய படமும் இருக்கும் என்பதை ஸ்டாலினுக்கு காட்டினோம். படம் வரைந்து முழுமை பெறும் சூழலில் ஸ்டாலின் வந்து பார்த்தார். கருணாநிதி, தன் கரங்களில் மோதிரம் அணிந்திருப்பார். அதனால், 'இரு கை விரல்களிலும் மோதிரம் இருக்க வேண்டும்; சட்டை காலரில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும்' என, சொன்னார்.மற்றபடி, பெரிய மாற்றம் எதையும் செய்ய சொல்லவில்லை. கருணாநிதியின் படத்தை பார்த்து விட்டு, ஓவியர்கள், பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
-- நமது நிருபர் --

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nanban - Kajang,மலேஷியா
05-ஆக-202108:26:31 IST Report Abuse
Nanban கருணாநிதி நீ திறமையானவர் தான் இல்லை என்றால் திருட்டு ரயிலில் வந்து திமுக வை குடும்ப சொத்தாக்கி தமிழ் நாடு முழுவதும் லட்சக்கணக்கான அடிமைகளை உன் குடும்பத்துக்கு அடிமைகளாக ஆகியிருக்க முடியுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X