நாட்டு வெடிகுண்டு வீச்சு கோவில் பூசாரி படுகாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாட்டு வெடிகுண்டு வீச்சு கோவில் பூசாரி படுகாயம்

Added : ஆக 05, 2021
Share
சேலம்:நாட்டு வெடிகுண்டு வீச்சில், பூசாரி படுகாயம் அடைந்தார். வெடிகுண்டு வீசியவர்களை கைது செய்யக் கோரி, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம், மல்லுாரைச் சேர்ந்தவர் வினோத்குமார், 32. தற்போது, ஜாகீர் அம்மாபாளையத்தில் வசிக்கும் இவர், குலதெய்வ கோவில் பூசாரியாக உள்ளார்.நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு வீடு அருகே வினோத்குமார், நண்பரிடம் பேசிக்
 நாட்டு வெடிகுண்டு வீச்சு கோவில் பூசாரி படுகாயம்

சேலம்:நாட்டு வெடிகுண்டு வீச்சில், பூசாரி படுகாயம் அடைந்தார். வெடிகுண்டு வீசியவர்களை கைது செய்யக் கோரி, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், மல்லுாரைச் சேர்ந்தவர் வினோத்குமார், 32. தற்போது, ஜாகீர் அம்மாபாளையத்தில் வசிக்கும் இவர், குலதெய்வ கோவில் பூசாரியாக உள்ளார்.நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு வீடு அருகே வினோத்குமார், நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தார்.அங்கு, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், வினோத் குமாரின் பைக் மீது ஒரு குண்டை வீசினர். வினோத்குமார் வலது காலில் படுகாயம் ஏற்பட்டது. மற்றொரு குண்டை அவரது நண்பர் வீட்டின் மீது வீசினர். அது சுவரில் பட்டு வெடித்து சிதறியது.

மல்லுார் தனியார் மருத்துவமனையில், வினோத்குமார் அனுமதிக்கப்பட்டார். சேலம் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ், வினோத் குமாரிடம் விசாரித்தார். தடய அறிவியல் துறை போலீசார் ஆய்வு செய்தனர்.வெடிகுண்டு வீசியவர்களை கைது செய்ய கோரி, நேற்று காலை 8:00 மணிக்கு, மல்லுார் - வீரபாண்டி சாலையில், மக்கள் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை ஏற்று, 9:30 மணிக்கு மக்கள் கலைந்து சென்றனர்.வெடிகுண்டு வீசியவர்களை கைது செய்ய, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X