கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தர்கா கொடி மரம் அகற்றம் எதிர்த்த வழக்கு தள்ளுபடி

Added : ஆக 05, 2021
Share
Advertisement
மதுரை:மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில், தர்கா அருகே அமைத்த இரும்பு கொடி மரத்தை அகற்ற ஆர்.டி.ஓ., பிறப்பித்த உத்தரவிற்கு எதிரான வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மலை உச்சியில், சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா உள்ளது. அருகே ஆலமரம் உள்ளது. அதில், முஸ்லிம் சமூகத்தினரால் நடத்தப்பட்ட

மதுரை:மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில், தர்கா அருகே அமைத்த இரும்பு கொடி மரத்தை அகற்ற ஆர்.டி.ஓ., பிறப்பித்த உத்தரவிற்கு எதிரான வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மலை உச்சியில், சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா உள்ளது. அருகே ஆலமரம் உள்ளது. அதில், முஸ்லிம் சமூகத்தினரால் நடத்தப்பட்ட சந்தனக்கூடு திருவிழாவிற்காக கொடி மரம் கட்டப் பட்டது.திருவிழா முடிந்த பின்னும் அவற்றை அகற்றாததால், ஜூன் 25ல் ஆர்.டி.ஓ., பிறப்பித்த உத்தரவில், 'புதிதாக அமைத்த இரும்பு கொடி மரத்தை அகற்ற வேண்டும்' என குறிப்பிட்டார்.

இதை எதிர்த்து தர்கா, பள்ளிவாசல் மூத்த மேலாண்மை அறங்காவலர் ஓசர்கான், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'ஆர்.டி.ஓ., உத்தரவு எங்களின் பாரம்பரிய வழிபாட்டு உரிமையை பாதிக்கிறது. எங்கள் தரப்பில் விளக்கம்அளிக்க வாய்ப்பளிக்கவில்லை. ஆர்.டி.ஓ., உத்தரவு ஒருதலைபட்சமானது. அவரது உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என கோரியிருந்தார்.

நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்தார். சுப்பிரமணிய சுவாமி கோவில் தரப்பில், 'தர்கா, பள்ளிவாசல் அவற்றிற்கு இடையே கொடிமரம் அமைந்துள்ள இடங்கள் முஸ்லிம்களுக்கு சொந்தம். மலை, மற்ற இடங்கள் கோவிலுக்கு சொந்தம்' என தெரிவித்தது. நீதிபதி, 'சம்பந்தப்பட்ட இடத்தை சர்வே செய்ய அரசுத் தரப்பு கூறுகிறது. அதற்கு மனுதாரர் தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளது. இடத்திற்கு இதுவரை துல்லியமாக எல்லை நிர்ணயிக்கப் படவில்லை. இவ்விவகாரத்தில், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசுத் தரப்பு கூறுகிறது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X