பொது செய்தி

தமிழ்நாடு

சேதமடைந்த நிழற்கூரை: மக்கள் அவதி

Added : ஆக 05, 2021
Share
Advertisement
கீழச்சேரி: கடம்பத்துார் ஒன்றியம், கீழச்சேரி ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே உள்ள பஸ் நிறுத்த நிழற்கூரை சேதமடைந்து உள்ளதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.மப்பேடு - சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கீழச்சேரி ஊராட்சி. இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே உள்ள பஸ் நிறுத்த நிழற்கூரையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.இந்த

கீழச்சேரி: கடம்பத்துார் ஒன்றியம், கீழச்சேரி ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே உள்ள பஸ் நிறுத்த நிழற்கூரை சேதமடைந்து உள்ளதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
மப்பேடு - சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கீழச்சேரி ஊராட்சி. இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே உள்ள பஸ் நிறுத்த நிழற்கூரையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிழற்கூரை, கடந்த ஜூலை மாதம் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் பயணியர் நிழற்கூரையை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அருகிலேயே ஊராட்சி மன்ற அலுவலகம் இருந்தும், சேதமடைந்த நிழற்கூரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர், நிழற்கூரையை சீரமைத்து தர வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, ஒன்றிய அலுவலர் வெங்கடேசன் கூறுகையில், ''சேதமடைந்த கீழச்சேரி பயணியர் நிழற்கூரையை, ஆய்வு செய்து விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X