கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை: 11 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் 'நோட்டீஸ்'

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி-கரும்பு விவசாயிகளின் நிலுவை தொடர்பாக, மத்திய அரசு மற்றும் தமிழகம் உள்ளிட்ட 11 மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்ப, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மஹாராஷ்டிர முன்னாள் எம்.பி.,யும், 'ஸ்வாபிமானி பக் ஷா' என்ற அமைப்பின் தலைவருமான ராஜூ அன்னா ஷெட்டி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:திருப்பி

புதுடில்லி-கரும்பு விவசாயிகளின் நிலுவை தொடர்பாக, மத்திய அரசு மற்றும் தமிழகம் உள்ளிட்ட 11 மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்ப, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.latest tamil news


மஹாராஷ்டிர முன்னாள் எம்.பி.,யும், 'ஸ்வாபிமானி பக் ஷா' என்ற அமைப்பின் தலைவருமான ராஜூ அன்னா ஷெட்டி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:திருப்பி விடுகின்றனவிவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்த நாளில் இருந்து 14 நாட்களுக்குள் அதற்கான தொகையை தர வேண்டும்' என, அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஆனால், தமிழகம், உ.பி., மஹாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநிலங்களைச் சேர்ந்த கரும்பு ஆலைகள், பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு நிலுவை வைத்துள்ளன.அவை விவசாயிகளுக்கான பணத்தை வேறு வழியில் திருப்பி விடுகின்றன. அதனால், ஆலைகளின் சர்க்கரை கையிருப்பை விற்று, விவசாயிகளின் நிலுவையை வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஒத்திவைப்புஇந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமை யிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.


latest tamil news


அப்போது அமர்வு பிறப்பித்த உத்தரவு:கரும்பு விவசாயிகளின் நிலுவை தொடர்பாக, மத்திய அரசும், தமிழகம், பஞ்சாப், குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 11 மாநில அரசுகளும் பதில் அளிக்குமாறு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்படுகிறது.வழக்கு விசாரணை மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
05-ஆக-202109:07:43 IST Report Abuse
venkatan இதுதான் இந்திய விவசாயிகளின் நிலைமை. அரசுகளின் லட்சணமும் இப்படி தான். அரசாங்க சொத்துக்களை ஜப்தி செய்து விவசாயிகளின் நிலுவைகளை செலுத்த நீதிமன்றம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
Vaiyapuri Rajendran - Chennai,இந்தியா
05-ஆக-202105:12:18 IST Report Abuse
Vaiyapuri Rajendran இந்தியா விவசாய நாடு. பெரும்பான்மை தொழில் விவசாயம். இந்தியாவில் உள்ள சர்க்கரை ஆலைகள் பெரும்பாலும் தனியார் வசம் உள்ளது . சர்க்கரை ஆலைகள் உற்பத்தி செய்யும் சர்க்கரை வெளிச்சந்தையில் விற்பனை செய்வதில் இருந்தும் அரசுக்கு வழங்கும் Levy Sugar price , கரும்பு கசண்டு மூலம் வருவாய் உள்ளது.. கரும்பு கசண்டு , கரும்பு சக்கை இதன் விற்பனை மூலம் வருவாய் வருகிறது . இதனை சம்மந்தப்பட்ட மாநில அரசு உரிய முறையில் கண்காணித்து சர்க்கரை விடுவிப்பு Sugar release order வழங்கும் போது கரும்பு விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்த அறிக்கை பெற்று ஒதுக்கீடு செய்ய வேண்டும்....சர்க்கரை தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர் Sugar inspector ஆய்வு செய்யும்போது சர்க்கரை ஆலைகளின் அனைத்து தரப்பு புள்ளி விவரங்களும் பெறப்படுகிறது . அதனை முறையாக ஆய்வு செய்து அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். அடுத்து Crushing Licence ஆண்டுதோறும் அந்தந்த மாநில சர்க்கரை துறை ஆணையர்களால் வழங்கப்படுகிறது.. அப்போது கரும்பு கிரைய தொகை பட்டுவாடா செய்யப்பட்டு விட்டதா என்று அந்தந்த மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அறிக்கை பெற்று கடந்த ஆண்டுக்கான நிலுவை இருப்பின் அதனை பட்டுவாடா செய்தால் தான் அடுத்த ஆண்டு அரவைக்கு உரிமம் புதுப்பிக்கப்படும் என்று சட்டம் கடுமையான முறையில் நடைமுறை படுத்த வேண்டும்.. அரசிடம் வானளாவிய அதிகாரம் உள்ளது . அதனை விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுத்தினால் எந்த ஒரு தொழிலிலும் சிக்கல் ஏற்படாது.
Rate this:
Cancel
S. Bharani - singapore,சிங்கப்பூர்
05-ஆக-202104:05:27 IST Report Abuse
S. Bharani பொறுப்பற்ற அரசியல் வாதிகள் இருப்பதால் அனைத்து விவகாரங்கள் நீதிமன்றம் தலையிடுவதால் நீதிமன்ற வேலை பளு அதிகரிக்கும் நிலையினால் பல வழக்குகள் தாமதமாகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X