பொது செய்தி

தமிழ்நாடு

'மூன்றாம் பால்' செயலி திருநங்கையர் வரவேற்பு

Added : ஆக 05, 2021
Share
Advertisement
ஈரோடு:திருநங்கை என்பதற்கு, இனி மருத்துவ சான்றிதழ் வழங்கும் முறையை மாற்றி, 'மூன்றாம் பால்' என்ற செயலி மூலம், தங்களை தாங்களே திருநங்கை என சுய அறிவிப்பு செய்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு உறுப்பினர் ரியா கூறியதாவது: முன்பு மருத்துவரிடம் சான்று பெற பரிசோதனை செய்து, உடல், மன ரீதியாக சிரமப் பட்டோம்.புதிய நடைமுறையை

ஈரோடு:திருநங்கை என்பதற்கு, இனி மருத்துவ சான்றிதழ் வழங்கும் முறையை மாற்றி, 'மூன்றாம் பால்' என்ற செயலி மூலம், தங்களை தாங்களே திருநங்கை என சுய அறிவிப்பு செய்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு உறுப்பினர் ரியா கூறியதாவது: முன்பு மருத்துவரிடம் சான்று பெற பரிசோதனை செய்து, உடல், மன ரீதியாக சிரமப் பட்டோம்.புதிய நடைமுறையை வரவேற்கிறோம். இந்நடைமுறையில் நாங்களே சுய அறிவிப்பு செய்து, மனநல மருத்துவரிடம் மட்டும் சான்று பெற்றால் திருநங்கை, திருநம்பியாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரியிடம் பதிவு செய்து, அடையாள அட்டை பெறலாம்.

இதற்காக சமூக நலத்துறை மூலம் வெளியிடப்பட்ட, 'மூன்றாம் பால்' என்ற செயலியில் பதிவு செய்து, அதன் மூலமே உரிய அறிவுரைகளை பெற அனைத்து குறிப்புகளும் உள்ளன.தற்போது திருநங்கையர் குறித்து, முறையான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இனி அனைவருக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும். அதே நேரம், திருநங்கையருக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X