கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விபத்து இழப்பீடு தொகை உயர் நீதிமன்றம் 'கெடு'

Added : ஆக 05, 2021
Share
Advertisement
மதுரை:கத்தாரில் நடந்த சாலை விபத்தில் இறந்தவருக்குரிய இழப்பீடு தொகையை, அவரது மனைவிக்கு நான்கு மாதங்களுக்குள் வழங்க, மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணிக்கசெல்வி தாக்கல் செய்த மனு: என் கணவர் கிருஷ்ணமூர்த்தி, கத்தார் நாட்டின் தோஹாவில் வேலை செய்தார். அங்கு 2011ல் சாலை விபத்தில் மரணமடைந்தார். இழப்பீடு வழங்க, கத்தார்

மதுரை:கத்தாரில் நடந்த சாலை விபத்தில் இறந்தவருக்குரிய இழப்பீடு தொகையை, அவரது மனைவிக்கு நான்கு மாதங்களுக்குள் வழங்க, மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணிக்கசெல்வி தாக்கல் செய்த மனு: என் கணவர் கிருஷ்ணமூர்த்தி, கத்தார் நாட்டின் தோஹாவில் வேலை செய்தார். அங்கு 2011ல் சாலை விபத்தில் மரணமடைந்தார். இழப்பீடு வழங்க, கத்தார் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்தொகையை விடுவித்து, எனக்கு வழங்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை செயலர், கத்தாரில் உள்ள இந்திய துாதரகம், ராமநாதபுரம் கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனு செய்தார்.

நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். மத்திய அரசு தரப்பில், 'நீண்ட சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இழப்பீடு தொகை 77 ஆயிரம் கத்தா ரியால், நீதிமன்றத்தில் 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளது. அத்தொகையை விடுவிக்க, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் வெளியுறவுத் துறை சார்பில் மனு செய்யப்படும்.

தொகை விடுவிக்கப்பட்டதும் உடனடியாக மனுதாரருக்கு வழங்கப்படும்' என தெரிவித்தது. நீதிபதி, 'வெளியுறவுத் துறை செயலர் மிக உன்னிப்பாக கவனித்து, இழப்பீடு தொகையை விரைவில் விடுவிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். முன்னுரிமை அடிப்படையில், நான்கு மாதங்களில் மனுதாரரிடம் தொகையை ஒப்படைக்க வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X