வரும் காலத்தில் அறிவு சார்ந்த போர் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வரும் காலத்தில் அறிவு சார்ந்த போர்

Added : ஆக 05, 2021
Share
குன்னுார்:''இனி வரும் காலங்களில் அறிவு சார்ந்த போராக இருக்கும் என்பதால், ராணுவத்தினர் தயாராக இருக்க வேண்டும்,'' என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார்.நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியில், 19 நட்பு நாடுகளை சார்ந்த, 30 அதிகாரிகள் உட்பட, பயிற்சி முடித்த 479 அதிகாரிகள் இடையே நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
 வரும் காலத்தில் அறிவு சார்ந்த போர்

குன்னுார்:''இனி வரும் காலங்களில் அறிவு சார்ந்த போராக இருக்கும் என்பதால், ராணுவத்தினர் தயாராக இருக்க வேண்டும்,'' என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார்.

நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியில், 19 நட்பு நாடுகளை சார்ந்த, 30 அதிகாரிகள் உட்பட, பயிற்சி முடித்த 479 அதிகாரிகள் இடையே நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:இங்கு பயிற்சி பெறும் பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை எதிர்காலத்தில் உயரும். இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது.

மாறி வரும் காலங்களில், நம் தேசிய நலன்களை பாதுகாப்பது, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வது, புதிய வழிகளை பின்பற்றுவது அவசியம். இதற்கு புதிய அணுகுமுறை தேவைப் படுகிறது.'சைபர்' வழி அச்சுறுத்தல்களை நாடு எதிர்கொள்ள சிறந்த தொழில்நுட்பத்துடன் கூடிய திட்டங்கள் தேவை. 21ம் நுாற்றாண்டு அறிவுசார் சமுதாயத்தை சார்ந்து உள்ளது. நம் பாதுகாப்பு துறை தயாராக இருக்க, ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து, சுயசார்பு நிலையை எட்ட வேண்டும்.

இனி வரும் காலங்களில் அறிவு சார்ந்த போருக்கு நம் ராணுவ படையினர் தயாராக இருக்க வேண்டும். தன்னம்பிக்கை, தைரியம், பொறுமை, விடாமுயற்சி, பணிவு ஆகியவை உங்களை பலப்படுத்தும். சிறந்த வழி நடத்தும் அதிகாரிகளாக நீங்கள் உருவெடுக்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.கவர்னர் பன்வாரிலால் புரோஹித், ராணுவ பயிற்சி கல்லுாரி தலைவர் லெப். ஜெனரல் காலுான் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X