பொது செய்தி

இந்தியா

பிறந்த ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே குழந்தைக்கு உணவு :ஆக.1-8 தாய்ப்பால் வாரம்

Added : ஆக 05, 2021
Share
Advertisement
தாய்ப்பால் ஓர் முழுமையான உணவு. இதில் 400க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்து, சுரப்பிகள், நோயெதிர்ப்பு சக்தி தொகுப்புகள் உள்ளன.குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டும்போதும். வயிற்றுப் போக்கு, இருமல், சளி, தோல்நோய்களிலிருந்துகாக்கிறது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் பிற்காலத்தில் ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய், உடற்பருமன் போன்ற பிரச்னைகளிலிருந்து
 பிறந்த ஆறு மாதங்களுக்கு  தாய்ப்பால் மட்டுமே குழந்தைக்கு உணவு :ஆக.1-8 தாய்ப்பால் வாரம்

தாய்ப்பால் ஓர் முழுமையான உணவு. இதில் 400க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்து, சுரப்பிகள், நோயெதிர்ப்பு சக்தி தொகுப்புகள் உள்ளன.குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டும்போதும். வயிற்றுப் போக்கு, இருமல், சளி, தோல்நோய்களிலிருந்துகாக்கிறது. தாய்ப்பால் குடித்து
வளரும் குழந்தைகள் பிற்காலத்தில் ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய், உடற்பருமன் போன்ற பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். பெண்
களுக்கும் சர்க்கரை நோய், மார்பக புற்றுநோய், கருமுட்டை புற்றுநோய் வராமல் தடுக்கும்.
குழந்தையின் உடல் எடை சீராக அதிகரித்து வந்தால் தாய்ப்பால் போதுமானது என்று அர்த்தம். ஆரம்பத்தில் எடை குறைந்து 10 - 14 நாட்களில் பிறந்த அளவுள்ள எடையை அடைந்து விடுவார்கள். ஒருநாளில் 5 - 6 முறை சிறுநீர் கழிப்பது, 2 - 3 முறை மலம் கழிப்பது, இரண்டிலிருந்து மூன்று மணி நேர இடைவெளியில் பால்குடிப்பதும் சரியான பால் சுரப்பிற்கானஅறிகுறி.குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு பால் கொடுத்து குழந்தை பால் குடிப்பதை ஊக்கப்படுத்த வேண்டும். வேலைக்கு செல்லும் பெண்கள் விடுப்பு காலத்தை முடிந்தவரை நீட்டிக்கலாம். முடியாத பட்சத்தில் வேலைக்கு செல்வதற்கு முன்பாக பாலை பீய்ச்சி சுத்தமான பாத்திரத்தில் வைக்கலாம்.
சாதாரண அறை வெப்பநிலையில்4 மணி நேரம் பால் கெடாமல் இருக்கும். பிரிட்ஜில் 4 டிகிரி வெப்பநிலையில் வைத்தால் 5 நாட்களுக்கு பால் கெடாது. குழந்தைக்கு கொடுப்பதற்கு முன்பாக அறை வெப்பநிலைக்கு கொண்டு வந்த பின்பே கொடுக்க வேண்டும்.தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எல்லா வகை உணவுகளையும் உண்ணலாம். பழங்கள், காய்கறி, கீரைகள், பால், இளநீர் சேர்ப்பது நல்லது. துரித உணவு, காரமான உணவு, காலிபிளவர், சோயாபீன்ஸ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இவற்றை சாப்பிட்டால் குழந்தைக்கு வயிற்றுவலி ஏற்படும். அளவுக்கு அதிகமாக காபி, டீ குடித்தால் குழந்தைக்கு துாக்கமின்மை ஏற்படும்; அடிக்கடி சிணுங்கும். முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டுமென உலக சுகாதார அமைப்பு, குழந்தை நல டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தாய்ப்பால், புட்டிப்பால் மாற்றி மாற்றி கொடுத்தால் தாய்ப்பால் இயற்கையாகவே வற்ற ஆரம்பிக்கும்.

தாய்ப்பாலில் நீர்ச்சத்து இருப்பதால்வெயில் காலமாக இருந்தாலும் தாய்ப்பால் மட்டுமே கொடுத்தால் போதும். தண்ணீர் குடித்தால் குழந்தைக்கு பசி அடங்கிவிடும். அதனால் ஊட்டச்சத்து குறைந்துவிடும். 'ஏசி' அறையில் குழந்தைகள் இருந்தால் நீர்ச்சத்து குறைவதற்கு வாய்ப்புஉள்ளது. இதனால் குழந்தைகள் அடிக்கடி தாய்ப்பால் குடிக்கும். இந்த நேரத்தில் அதிக நீராகாரங்களை சாப்பிட வேண்டும்.இரட்டை குழந்தைகள் பிறந்தாலும் முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுத்தால் போதும். வலது, இடது மார்பகங்கள் என பிரித்து பால் கொடுத்தால் சரியாக இருக்கும். குறைமாத குழந்தைக்கு உறிஞ்சுதல், விழுங்குதல் பிரச்னை இருந்தால் பாலை பீய்ச்சி சங்கில் ஊற்றலாம். குறைமாத குழந்தைகளை ஈன்ற பெண்களுக்கு அதிகளவு ஜீரண சக்தியுடன் கூடிய பால் சுரக்கும். அதில் புரதச்சத்து அதிகமிருக்கும்.
கொரோனா தொற்றில் இருந்து மீண்டாலும், பாதிக்கப்பட்டிருந்தாலும் மாஸ்க் அணிந்து தாய்ப்பால் கொடுக்கலாம். மற்ற நேரங்களில் குழந்தையை தொடாமல் பாதுகாக்கலாம். பிறந்த குழந்தையை தத்தெடுக்கும்பெண்கள் மகப்பேறு டாக்டர் ஆலோசனை பேரில் உணவு மற்றும் மருந்துகளை உட்கொண்டால் தாய்ப்பால் சுரப்பதற்கு வாய்ப்புண்டு.- டாக்டர் முருகன் ஜெயராமன்குழந்தைகள் நல நிபுணர்மதுரை98948 59784

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X