பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி., கிருஷ்ணா நதி நீர் வரத்து

Added : ஆக 05, 2021
Share
Advertisement
ஊத்துக்கோட்டை: ஆந்திராவில் இருந்து, 50 நாட்களில் இதுவரை, 2.5 டி.எம்.சி., கிருஷ்ணா நதி நீர் தமிழகத்திற்கு வந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம், பூண்டி, சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு, 3.2 டி.எம்.சி.,ஆக உள்ளது. இதன் நீர்மட்டம், 35 அடி. மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர் இதன் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. தமிழகம் - ஆந்திரா இடையிலான ஒப்பந்தத்தின் படி, ஜூன் 17ம் தேதி, கண்டலேறு

ஊத்துக்கோட்டை: ஆந்திராவில் இருந்து, 50 நாட்களில் இதுவரை, 2.5 டி.எம்.சி., கிருஷ்ணா நதி நீர் தமிழகத்திற்கு வந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி, சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு, 3.2 டி.எம்.சி.,ஆக உள்ளது. இதன் நீர்மட்டம், 35 அடி. மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர் இதன் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.
தமிழகம் - ஆந்திரா இடையிலான ஒப்பந்தத்தின் படி, ஜூன் 17ம் தேதி, கண்டலேறு அணையில் இருந்து, தமிழகத்திற்கு கிருஷ்ணா நீர் திறந்து விடப்பட்டது. இந்நீர் தொடர்ந்து தமிழகத்திற்கு வந்து கொண்டுள்ளது. நேற்று 6:00 மணி நிலவரப்படி, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட்டிற்கு, வினாடிக்கு, 769 கன அடி நீர் வந்துகொண்டு இருக்கிறது. 2.5 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் தமிழகத்திற்கு வந்துள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்தில், நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, கிருஷ்ணா நீர் வினாடிக்கு, 650 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.நீர்த்தேக்கத்தில் தற்போது, நீர் இருப்பு, 2 டி.எம்.சி.,யாகவும், நீர்மட்டம், 31.15 அடியாகவும் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X