பொது செய்தி

இந்தியா

சிறப்பு அந்தஸ்து ரத்து பயனற்றது; குப்கர் கூட்டணி அறிவிப்பு

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
ஸ்ரீநகர்-ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் 'இந்த நடவடிக்கை பயனற்றது என்பதை மத்திய அரசு உணர்ந்திருக்கும்' என ஜம்மு - காஷ்மீர் எதிர்க்கட்சிகள் அடங்கிய குப்கர் கூட்டணி தெரிவித்துள்ளது.ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 2019 ஆக. 5ல் நீக்கப்பட்டது. மேலும் மாநிலம் ஜம்மு - காஷ்மீர் லடாக் என இரு யூனியன்

ஸ்ரீநகர்-ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் 'இந்த நடவடிக்கை பயனற்றது என்பதை மத்திய அரசு உணர்ந்திருக்கும்' என ஜம்மு - காஷ்மீர் எதிர்க்கட்சிகள் அடங்கிய குப்கர் கூட்டணி தெரிவித்துள்ளது.latest tamil news


ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 2019 ஆக. 5ல் நீக்கப்பட்டது. மேலும் மாநிலம் ஜம்மு - காஷ்மீர் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதன் இரண்டாவது ஆண்டையொட்டி ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் அடங்கிய குப்கர் கூட்டணி விடுத்துள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளாகிறது. மத்திய அரசு சிறப்பு அந்தஸ்தை நீக்கி தன் அனைத்து எல்லைகளையும் மீறியுள்ளது.

தனக்குள்ள அதிகாரத்தை காட்டுவதற்காக மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் நாட்டின் எந்த மாநிலத்தையும் பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றும் அபாயம் உள்ளது.சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் மாநிலத்தின் பொருளாதாரம் சீரழிந்துள்ளது. மக்கள் வேலைவாய்ப்பை தொழிலை இழந்துள்ளனர். இன்னும் பலர் சிறையில் உள்ளனர். சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறுவதற்கு அனைத்து சட்ட வழிகளையும் எடுத்து வருகிறோம்.


latest tamil newsஅதனால் மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். சிறப்பு அந்தஸ்தை நீக்கியபோது புதிய காஷ்மீரை உருவாக்குவோம் என கூறினார்கள். ஆனால் அது ஒரு 'ஜோக்' ஆகவே உள்ளது.தன் நடவடிக்கை பயனற்றது என்பதை இந்த இரண்டாண்டில் மத்திய அரசு உணர்ந்துஇருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran V - Chennai,இந்தியா
05-ஆக-202118:30:53 IST Report Abuse
Ramachandran V ஆமாம். உங்களைப்போன்றோர்களுக்கு பயன் அற்றதாக பொய் விட்டது என்ன செய்ய.?
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
05-ஆக-202116:15:10 IST Report Abuse
Nepolian S இது மட்டும் அல்ல இந்த மானங்கெட்ட டுபாக்கூர் கையாளாகாத அரசு கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் வேஸ்ட் என்பது அந்த வேஸ்ட்களுக்கே தெரிந்தாலும் செய்த தவறை மொழுகி மறைத்து பிழைப்பு ஓட்டுதுக
Rate this:
Cancel
பொறியாளன் இளங்கோ., கொங்குநாடு. மத்திய அரசு நிச்சயம் POK (Pakistan occupied Kashmir) பகுதிகளை மீட்டெடுக்க ஒரு சர்ஜிகல் ஸ்ரைக் செய்தே ஆக வேண்டும். அம்மண்ணின் பழங்குடிகள் மீண்டும் குடியமர்த்த பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X