பொது செய்தி

இந்தியா

வெளிநாடு சென்ற அரசு ஊழியர்கள் விபரம்

Added : ஆக 05, 2021
Share
Advertisement
புதுச்சேரி-வெளிநாடு சென்றுள்ள புதுச்சேரி அரசு ஊழியர்களின் விபரங்களை சமர்ப்பிக்குமாறு, அனைத்து துறை தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர், அனைத்து துறை செயலர்கள், தலைவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை;சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை 8ம் தேதி, புதுச்சேரி அரசுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுச்சேரி-வெளிநாடு சென்றுள்ள புதுச்சேரி அரசு ஊழியர்களின் விபரங்களை சமர்ப்பிக்குமாறு, அனைத்து துறை தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர், அனைத்து துறை செயலர்கள், தலைவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை;சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை 8ம் தேதி, புதுச்சேரி அரசுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், புதுச்சேரியில் உள்ள அரசு ஊழியர்கள் எத்தனை பேர் வெளிநாடு சென்றுள்ளனர். எந்த துறையில் அனுமதி பெற்றனர்?அரசு பணி நிமித்தமாக சென்றார்களா, கல்வி கற்க சென்றனரா. அரசு ஊழியர்கள் வெளிநாட்டுக்கு சென்றபோது அந்த பணியிடங்களை யார் கவனித்து கொள்கிறார்கள். விதிமுறைகளை மீறி சென்றதாக இதுவரை எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்ற விவரங்களை கேட்டுள்ளது.எனவே, இந்த விபரங்களை இன்று 5ம் தேதி மாலை 5:00 மணிக்குள், dpar.ccd.pon@nic.in என்ற இணையத்தில், அனைத்து துறை தலைவர்களும் தெரிவிக்க வேண்டும். பதில் வரவில்லை என்றால், அந்த துறைகளில் யாரும் வெளிநாடு செல்லவில்லை என கருதப்படும்.சரியான தகவல்கள் தராதபட்சத்தில், ஏதேனும் தவறுகள் ஏற்பட்டால், நீதிமன்ற நடவடிக்கைக்கு துறை அதிகாரிகள் உட்படுத்தப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X