பொது செய்தி

இந்தியா

முக்கிய கோப்புகளுக்கு கவர்னர் ஒப்புதல்

Added : ஆக 05, 2021
Share
Advertisement
புதுச்சேரி,-'பாட்கோ'வை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகம் என பெயர் மாற்றம் செய்ய கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.இதுகுறித்து கவர்னரின் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கவர்னர் தமிழிசை நேற்று சில முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்து உள்ளார்.அதில், புதுச்சேரி ஆதி திராவிடர் மேம்பாட்டுக் கழகத்தின் பெயரை, ஆதிதிராவிடர் மற்றும்

புதுச்சேரி,-'பாட்கோ'வை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகம் என பெயர் மாற்றம் செய்ய கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.இதுகுறித்து கவர்னரின் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கவர்னர் தமிழிசை நேற்று சில முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்து உள்ளார்.அதில், புதுச்சேரி ஆதி திராவிடர் மேம்பாட்டுக் கழகத்தின் பெயரை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகம் என மாற்றம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளார். அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் பழங்குடியின மக்களுக்கு சலுகைகள் வழங்குவதற்காக, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.நடப்பு ஆண்டு ஜூலை மாதத்திற்கான முதியோர் ஓய்வூதியம் வழங்க ரூ. 39.73 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவக் கல்லூரி, அன்னை தெரசா சுகாதார பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், காமராஜர் மருத்துவக் கல்லூரி. ஆகிய சுகாதார கல்வி நிறுவனங்களுக்கு முதல்வரை தலைவராகவும், தலைமைச் செயலரை துணைத் தலைவராகவும் நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X