பொது செய்தி

இந்தியா

தாய்ப்பால் வங்கி துவங்க வேண்டும்; கவர்னர் தமிழிசை பேச்சு

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுச்சேரி,-'புதுச்சேரி அரசு மருத்துவமனையில், நடமாடும் தாய்ப்பால் வங்கி தொடங்க வேண்டும்' என கவர்னர் தமிழிசை பேசினார். புதுச்சேரி, எல்லைப்பிள்ளைச்சாவடியில் உள்ள ராஜிவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில், உலக தாய்ப்பால் வார விழா நேற்று நடந்தது.விழாவை துவக்கி வைத்து கவர்னர் தமிழிசை பேசியதாவது: ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 2014ம் ஆண்டு முதல்,
 தாய்ப்பால் வங்கி துவங்க வேண்டும்; கவர்னர் தமிழிசை பேச்சு

புதுச்சேரி,-'புதுச்சேரி அரசு மருத்துவமனையில், நடமாடும் தாய்ப்பால் வங்கி தொடங்க வேண்டும்' என கவர்னர் தமிழிசை பேசினார்.

புதுச்சேரி, எல்லைப்பிள்ளைச்சாவடியில் உள்ள ராஜிவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில், உலக தாய்ப்பால் வார விழா நேற்று நடந்தது.விழாவை துவக்கி வைத்து கவர்னர் தமிழிசை பேசியதாவது: ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 2014ம் ஆண்டு முதல், குழந்தைகளுக்கு முற்றிலுமாக தாய்ப்பால் தரப்படுகிறது என்பது பாராட்டுக்குரியது.

குழந்தைகளுக்கு நிச்சயமாக தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும். குறைபாடுடைய குழந்தைகளைக் காப்பாற்ற தாய்ப்பால் அவசியம். இது குறித்த விழிப்புணர்வை, மக்களிடம் அதிகம் ஏற்படுத்த வேண்டியது அவசியம். புதுச்சேரி போன்ற மாநிலத்திற்கு தாய்ப்பால் வங்கி தேவை. நடமாடும் தாய்ப்பால் வங்கி இருப்பது இன்னும் பயன் தரும். ஏனென்றால் வேலைக்குச் செல்லும் பெண்கள் இங்கு அதிகம் உள்ளனர். நோய்வாய்ப்பட்ட பெண்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். நடமாடும் தாய்ப்பால் வங்கியை துவக்க, மருத்துவமனை முயற்சி எடுக்க வேண்டும்.தாய்மார்கள், ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பாகுபாடின்றி தாய்ப்பால் கொடுத்து வளர்க்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பது தாய்-சேய் ஆரோக்கியத்திற்கு துணை செய்யும். கொரோனா பெருந்தொற்றுச் சூழலில் தாய்மார்கள் தடுப்பூசிப் போட்டுக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் பேசினார். பின்னர் மருத்துவமனையை கவர்னர் பார்வையிட்டு, டாக்டர்களுக்கு ஆலோசனை வழங்கினார். முன்னதாக, விழாவில் பங்கேற்ற சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு, மருத்துவக் கண்காணிப்பாளர் சுஜாதா, துணை இயக்குநர் (குடும்ப நலம்) அனந்தலட்சுமி உள்ளிட்டோர் தாய்ப்பால் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
05-ஆக-202114:16:54 IST Report Abuse
vpurushothaman மகப்பேறு - மகளிர் நோய் இயல் மருத்துவர் ஆளுநரானால் எவ்வளவு நல்ல திட்டம் பாருங்கள். " இரட்டைக் குழுந்தையின் " தாய் எனத் தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்ட ஆளுநர் செயல் ஒவ்வொன்றும் பாராட்டுக்குரியவை. மற்ற ஆளுநர்களும் பினபற்றத் தக்கவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X