பொது செய்தி

இந்தியா

முதல்வர் ரங்கசாமிக்கு ஜனாதிபதி வாழ்த்து

Added : ஆக 05, 2021
Share
Advertisement
புதுச்சேரி,-முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளையொட்டி, ஜனாதிபதி, உள்துறை அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.முதல்வர் ரங்கசாமியின் 72வது பிறந்த நாளை நேற்று மாநிலம் முழுதும் என்.ஆர்.காங்., கட்சியினர் கொண்டாடினர்.காலையில், கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவிலில் முதல்வர் ரங்கசாமி வழிபட்டார். அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் பூஜை செய்து, அன்னதானம்

புதுச்சேரி,-முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளையொட்டி, ஜனாதிபதி, உள்துறை அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.முதல்வர் ரங்கசாமியின் 72வது பிறந்த நாளை நேற்று மாநிலம் முழுதும் என்.ஆர்.காங்., கட்சியினர் கொண்டாடினர்.காலையில், கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவிலில் முதல்வர் ரங்கசாமி வழிபட்டார். அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் பூஜை செய்து, அன்னதானம் வழங்கினார்.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் முதல்வர் ரங்கசாமிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், ரமேஷ், லட்சுமிகாந்தன், ராமலிங்கம், முன்னாள் சபாநாயகர்கள் சபாபதி, சிவக்கொழுந்து, கோகுலகிருஷ்ணன் எம்.பி., ஆகியோர் முதல்வருக்கு நேரில் வாழ்த்து கூறினர். நந்தா ஸ்ரீதரன், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் ஆகியோர் முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.என்.ஆர்.காங். மாநில செயலாளர் லுாயி கண்ணையா, அ.தி.மு.க., மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர், என்.எஸ். பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் பார்த்திபன், ஜம்புலிங்கம், முன்னாள் கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன் என்கின்ற மாரிமுத்து, ஆனந்தரங்கப்பிள்ளை நகர் சுந்தரராஜ், அண்ணா நகர் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன், கதிர்காமம் ஆனந்தா நகர் சீனுவாசராகவன், மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை தொழிற்சாலை உரிமையாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், வியாபாரிகள், அரசு ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோர் முதல்வருக்கு வாழ்த்து கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X