மருந்து வாங்கியதில் ஊழல் சி.பி.ஐ., விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்

Added : ஆக 05, 2021
Share
Advertisement
புதுச்சேரி-கோரிக்கையை வலியுறுத்தி, அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் லட்சுமணசாமி, பொருளாளர் சீனுவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில், தேசிய சுகாதார இயக்ககத்திற்கு மருந்து வாங்கியதில்

புதுச்சேரி-கோரிக்கையை வலியுறுத்தி, அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் லட்சுமணசாமி, பொருளாளர் சீனுவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில், தேசிய சுகாதார இயக்ககத்திற்கு மருந்து வாங்கியதில் ஊழல் நடந்தது விசாரணையில் தெரியவந்தது. பயன் அளிக்காத மருந்துகளை தேவைக்கு அதிகமாக வாங்கி, பல கோடி ரூபாய் ஊழல் நடந்தது. மருந்தாளுநர் பணி நீக்கம் செய்யப்பட்டார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். தேசிய சுகாதார ஊழியர்கள், ஆஷா பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X