கொரோனாவுக்கு மூவர் பலி | Dinamalar

கொரோனாவுக்கு மூவர் பலி

Added : ஆக 05, 2021
Share
புதுச்சேரி,-கொரோனா தொற்று காரணமாக இரு மூதாட்டிகள் உள்ளிட்ட மூவர் இறந்தனர்.புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வந்தது. அதையடுத்து, தடுப்பூசி செலுத்தும் பணியை சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியது. இதுவரை 58 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது.அதன் காரணமாக, கொரோனா பரவல் வெகுவாக குறைந்தது. கடந்த சில தினங்களாக நோய் தொற்று பரவல் 100க்கும்

புதுச்சேரி,-கொரோனா தொற்று காரணமாக இரு மூதாட்டிகள் உள்ளிட்ட மூவர் இறந்தனர்.புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வந்தது. அதையடுத்து, தடுப்பூசி செலுத்தும் பணியை சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியது. இதுவரை 58 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது.அதன் காரணமாக, கொரோனா பரவல் வெகுவாக குறைந்தது. கடந்த சில தினங்களாக நோய் தொற்று பரவல் 100க்கும் குறைவாகவே இருந்து வருகிறது. மேலும், கொரோனாவால் உயிரிழப்பும் குறைந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் 5,868 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 120 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால், மாநிலத்தில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 252 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, 162 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 745 பேர் வீடுகளில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் காரைக்காலை சேர்ந்த 30 வயது பெண், புதுச்சேரியை சேர்ந்த 72, 68 வயது மூதாட்டி இருவர் இறந்தனர். இதனால், கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 1,798 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X