விருதை நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் திடீர் தர்ணா| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விருதை நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் திடீர் தர்ணா

Added : ஆக 05, 2021
Share
விருத்தாசலம்,-விருத்தாசலம் நெஞ்சாலைத்துறை அலுவலகம் முன் இந்திய மாணவர் சங்கத்தினர், பொது மக்கள் தர்ணாவில் ஈடுபட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிக்காக, கோ.பொன்னேரி, மும்முடிச்சோழகன், கத்தாழை, கரைமேடு கிராமத்தில் இருந்த பயணியர் நிழற்குடைகள் இடித்து அகற்றப்பட்டன.இதுவரை இப்பகுதிகளுக்கு புதிய நிழற்குடை

விருத்தாசலம்,-விருத்தாசலம் நெஞ்சாலைத்துறை அலுவலகம் முன் இந்திய மாணவர் சங்கத்தினர், பொது மக்கள் தர்ணாவில் ஈடுபட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிக்காக, கோ.பொன்னேரி, மும்முடிச்சோழகன், கத்தாழை, கரைமேடு கிராமத்தில் இருந்த பயணியர் நிழற்குடைகள் இடித்து அகற்றப்பட்டன.இதுவரை இப்பகுதிகளுக்கு புதிய நிழற்குடை அமைக்கப்படாததால், கிராம மக்கள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறிச் செல்லும் நிலை உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அக்கிராம மக்கள் பயணியர் நிழற்குடை கட்டித் தரக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருடன் விருத்தாசலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன் நேற்று காலை 11 மணியளவில் தர்ணாவில் ஈடுபட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். வட்டத் தலைவர் பரமசிவம், கிளை செயலர்கள் வேல்முருகன், தமிழ்மணி, விஜய், விவசாய தொழிலாளர் சங்க வட்ட தலைவர் வீரமணி, கர்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.அப்போது அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனை ஏற்று, 11:30 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X