பொது செய்தி

தமிழ்நாடு

பெண் போலீஸ் உடல் தகுதித் தேர்வு; இன்று 5ம் தேதி பங்கேற்க வாய்ப்பு

Added : ஆக 05, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுாரில் இரண்டு நாட்கள் பெண் போலீஸ் உடல் திறன் தேர்வில் பங்கேற்காதவர்கள் இன்று (5ம் தேதி) நடைபெறும் தேர்வில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு போலீஸ் துறை, தீயணைப்புத் துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆண்களுக்கான முதற்கட்ட உடல் தகுதி தேர்வு கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் கடந்த 26ம் தேதி துவங்கி கடந்த

கடலுார்-கடலுாரில் இரண்டு நாட்கள் பெண் போலீஸ் உடல் திறன் தேர்வில் பங்கேற்காதவர்கள் இன்று (5ம் தேதி) நடைபெறும் தேர்வில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு போலீஸ் துறை, தீயணைப்புத் துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆண்களுக்கான முதற்கட்ட உடல் தகுதி தேர்வு கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் கடந்த 26ம் தேதி துவங்கி கடந்த 2ம் தேதி வரையில் நடந்தது. இதில், 1,822 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு இரண்டாம் கட்ட உடல் தகுதித் தேர்வு நாளை (6ம் தேதி) துவங்குகிறது.பெண்களுக்கான முதற்கட்ட உடல் தகுதித் தேர்வு கடந்த 3ம் தேதி துவங்கியது. இரண்டு நாட்கள் நடந்த தேர்வில் 628 பேர் பங்கேற்றனர். 173 பேர் பங்கேற்கவில்லை. 464 பேர் தேர்ச்சி பெற்றனர்இந்நிலையில், 3ம் தேதி மற்றும் 4ம் தேதி நடந்த இரண்டாம் நிலை காவலர்கள் பெண்கள் தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு இன்று (5ம் தேதி) நடைபெறும் தேர்வில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள், கொரோனா பரிசோதனை சான்றுடன் காவலர் உடல் திறன் தேர்வில் பங்கேற்லாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.பெண்களுக்கான முதற்கட்ட உடல்திறன் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு வரும் 12ம் தேதி இரண்டாம் கட்ட உடல்திறன் தேர்வு நடத்தப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X