பொது செய்தி

தமிழ்நாடு

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஊராட்சியின் பதிவேடுகள் ஆய்வு

Added : ஆக 05, 2021
Share
Advertisement
பெண்ணாடம்,-பெண்ணாடம் அருகே ஊராட்சியின் வரவு செலவு குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டது.பெண்ணாடம் அடுத்த பெ.பூவனுார் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் கோவிந்தராஜ். பெ.பூவனுார் ஊரா்்சியில் வரவு செலவில் முறைகேடு நடந்ததாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் பெற கடந்த மாதம் விண்ணப்பித்திருந்தார். வரவு செலவு

பெண்ணாடம்,-பெண்ணாடம் அருகே ஊராட்சியின் வரவு செலவு குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டது.பெண்ணாடம் அடுத்த பெ.பூவனுார் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் கோவிந்தராஜ். பெ.பூவனுார் ஊரா்்சியில் வரவு செலவில் முறைகேடு நடந்ததாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் பெற கடந்த மாதம் விண்ணப்பித்திருந்தார். வரவு செலவு கணக்குளை ஆய்வு செய்ய நல்லுார் ஒன்றிய பி.டி.ஓ., அனுமதி அளித்தார். இதுதொடர்பாக, ஊராட்சி செயலர் கனகசபை பதிவேடுகளை ஆய்வு செய்ய சமூக ஆர்வலர் கோவிந்தராஜிக்கு அனுமதி வழங்கியிருந்தார்.அதன்படி, நேற்று பகல் 11 மணியளவில் ஊராட்சி அலுவலகத்தில் துணை பி.டி.ஓ., வித்யா முன்னிலையில், கோவிந்தராஜ் பதிவேடுகளை ஆய்வு செய்தார். அப்போது, ரூ. 1 லட்சத்து 4 ஆயிரம் செலவுக்கான எந்த ரசீதும் இல்லை. இது குறித்து ஊராட்சி செயலரிடம் கேட்டார். அதற்கு துணை பி.டி.ஓ., வித்யா, ஊராட்சி தலைவர் முருகன் ஆகியோர் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பதிவேடுகள் ஆய்வு பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இச்சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X