சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியிடம் அத்துமீறல்: காமுகனுக்கு 'போக்சோ'

Added : ஆக 05, 2021
Share
Advertisement
ஆவடி: திருமுல்லைவாயிலில் சிறுமியிடம் அத்துமீறியவரை, போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, தன் மகளை ஒரு மணி நேரமாக காணவில்லை என, திருமுல்லைவாயிலைச் சேர்ந்த 12 வயது சிறுமியின் தாய், புகார் அளித்தார். தகவலறிந்த திருமுல்லைவாயில் போலீசார், உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரித்தனர். இதில், தன் தாய் தைத்த துணிகளை, அருகில்

ஆவடி: திருமுல்லைவாயிலில் சிறுமியிடம் அத்துமீறியவரை, போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.
சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, தன் மகளை ஒரு மணி நேரமாக காணவில்லை என, திருமுல்லைவாயிலைச் சேர்ந்த 12 வயது சிறுமியின் தாய், புகார் அளித்தார். தகவலறிந்த திருமுல்லைவாயில் போலீசார், உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரித்தனர்.
இதில், தன் தாய் தைத்த துணிகளை, அருகில் உள்ள 'எக்ஸ்போர்ட்' கம்பெனிக்கு சிறுமி கொடுக்கச் சென்றதும், அதன் பின் மாயமானதும் தெரிய வந்தது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு 'கேமரா'க்களை ஆய்வு செய்து விசாரித்தனர்.
அப்போது, மர்ம நபர் ஒருவர், தென்றல் நகர் கிழக்கு, திருவள்ளூர் தெருவில் உள்ள ஒரு வீட்டிற்குள் சிறுமியை இழுத்துச் செல்வது தெரிய வந்தது. அந்த வீட்டில் விசாரித்தபோது, அங்கு வசித்து வரும் ஓட்டுனர் குமரேசன், 29, என்பவர் சிறுமிக்கு முத்தம் கொடுத்து அத்துமீறலில் ஈடுபட முயன்றதும், சிறுமி கத்தியதால் குளியல் அறையில் அடைத்து வைத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் சிறுமியை மீட்டனர். குமரேசனை கைது செய்து ஆவடி அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து, குமரேசன் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X