கோவில் குளத்தில் குளித்த சிறுவன் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவில் குளத்தில் குளித்த சிறுவன் பலி

Added : ஆக 05, 2021
Share
வியாசர்பாடி: வியாசர்பாடியில் சாமியார் தோட்டத்தில் உள்ள கோவில் குளத்தில் குளித்த சிறுவன் பலியானார். வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் 54வது பிளாக்கைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது கடைசி மகன் ராகுல், 15; பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.சம்பவத்தன்று இரவு, ராகுல் தன் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, வியாசர்பாடி, சாமியார் தோட்டத்தில் உள்ள கோவிலுக்கு சென்று, அங்குள்ள

வியாசர்பாடி: வியாசர்பாடியில் சாமியார் தோட்டத்தில் உள்ள கோவில் குளத்தில் குளித்த சிறுவன் பலியானார்.
வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் 54வது பிளாக்கைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது கடைசி மகன் ராகுல், 15; பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு, ராகுல் தன் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, வியாசர்பாடி, சாமியார் தோட்டத்தில் உள்ள கோவிலுக்கு சென்று, அங்குள்ள குளத்தில் குளித்தனர். வெகுநேரமாகியும் ராகுல் தண்ணீருக்குள் இருந்து வெளியே வராததால், நண்பர்கள் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர்.
தகவலறிந்து வந்த வியாசர்பாடி போலீசார், தீயணைப்பு துறையினர், மூன்று மணி நேரம் போராடி, சேற்றில் சிக்கிய சிறுவனின் உடலை நள்ளிரவு மீட்டனர். இது குறித்து, வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X