பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளுக்கு எதிரான வன்முறை; சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட ஒப்புதல்

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தடுக்கும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் செயல்படும் 389 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் உட்பட 1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் தொடர்ந்து செயல்பட, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.நிர்பயா நிதிமத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்தது.இதில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகள் குறித்து,

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தடுக்கும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் செயல்படும் 389 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் உட்பட 1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் தொடர்ந்து செயல்பட, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.



latest tamil news



நிர்பயா நிதிமத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்தது.இதில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகள் குறித்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளதாவது:நாடு முழுதும் 1,023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் தொடர்ந்து செயல்படுவதற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதில் 389 நீதிமன்றங்கள் குழந்தை களுக்கு எதிரான போக்சோ சட்ட வழக்கு களை விசாரிக்கக் கூடியவை.

இந்த போக்சோ நீதிமன்றங்கள் 2023ம் ஆண்டு மார்ச் வரை செயல்பட 1,572 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 971 கோடி ரூபாயை மத்திய அரசு செலவிடும். மாநில அரசுகளின் பங்கு 601 கோடி ரூபாயாகும். அதை நிர்பயா நிதியில் இருந்து செயல்படுத்தலாம்.இலக்குஇதைத் தவிர, 'சமக்ர சிக் ஷா அபியான்' எனப்படும் முழுமையான கல்வி இயக்கம் திட்டத்தை 2026ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.


latest tamil news



இதற்காகும் 2.94 லட்சம் கோடி ரூபாயில், மத்திய அரசு தன் பங்காக 1.85 லட்சம் கோடி ரூபாயை செலவிடும்.இந்த திட்டத்தால் 11.6 லட்சம் பள்ளிகள், 15.6 கோடி மாணவர், 57 லட்சம் ஆசிரியர் பயன்பெறுவர். பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தும் இந்த திட்டத்தின் கீழ், மாணவரின் கற்கும் திறனை அதிகரிப்பதே இலக்காகும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
05-ஆக-202110:49:10 IST Report Abuse
vbs manian இந்த மாதிரி குற்ற வாளிகளைஉடனே தண்டிக்க வேண்டும். தனிமனித உரிமை சமூக நீதி என்றெல்லாம் சொல்லி வழக்கு போட்டு சிலர் இழுத்தடிக்கிறார்கள்.ஏன்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X