சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாயமான 9 வயது சிறுமி மீட்பு

Added : ஆக 05, 2021
Share
Advertisement
பம்மல்: பம்மலில் மாயமான, 9 வயது சிறுமி மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.பம்மல், இந்திரா நகர், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ஹமிதா, 32; வீட்டு வேலை செய்கிறார். இவரது மகள் சனா பாத்திமா, 9; மூன்றாம் வகுப்பு மாணவி. மாலை, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த மகள் காணாமல் போனது தெரியவந்தது; பல இடங்களில் தேடியும் மகள் கிடைக்கவில்லை. இதையடுத்து, தாய் ஹமீதா, சங்கர் நகர் காவல்

பம்மல்: பம்மலில் மாயமான, 9 வயது சிறுமி மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பம்மல், இந்திரா நகர், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ஹமிதா, 32; வீட்டு வேலை செய்கிறார். இவரது மகள் சனா பாத்திமா, 9; மூன்றாம் வகுப்பு மாணவி. மாலை, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த மகள் காணாமல் போனது தெரியவந்தது; பல இடங்களில் தேடியும் மகள் கிடைக்கவில்லை. இதையடுத்து, தாய் ஹமீதா, சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விரைந்து வந்த போலீசார், மோப்ப நாய் உதவியுடன் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். பல்லாவரம், வெட்டர் லைனில் சுற்றித் திரிந்த சிறுமி சனா பாத்திமாவை, டீ வியாபாரி ஒருவர் மீட்டு, பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதன் பின், சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X