சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இதய நோயாளிக்கு 'அப்பல்லோ' மறுவாழ்வு

Added : ஆக 05, 2021
Share
Advertisement
சென்னை: இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருந்த ஆந்திர மாநில விவசாயிக்கு, 'மிட்ரா கிளிப்' பொருத்தி, 'அப்பல்லோ' மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் காமேஷ்வர ராவ், 41; விவசாயி.மூச்சு திணறலால் 90 நாட்களுக்கும் மேலாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக, ஐதராபாதில் உள்ள பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும்

சென்னை: இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருந்த ஆந்திர மாநில விவசாயிக்கு, 'மிட்ரா கிளிப்' பொருத்தி, 'அப்பல்லோ' மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் காமேஷ்வர ராவ், 41; விவசாயி.மூச்சு திணறலால் 90 நாட்களுக்கும் மேலாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக, ஐதராபாதில் உள்ள பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பயனில்லை.'மிட்ரா கிளிப்' இதற்கு, இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு என, டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் சாய் சதீஷ் தலைமையிலான டாக்டர்கள், நோயாளியின் இதய பிரச்னைக்கு, 'மிட்ரா கிளிப்' பொருத்தி, நவீன சிகிச்சை வாயிலாக விவசாயிக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர்.
இது குறித்து, டாக்டர் சாய் சதீஷ் கூறியதாவது:
இதயத்தின் 'மிட்ரல்' வால்வில் ஏற்படும் பிரச்னைகளை சரி செய்வதற்கு அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும் என்ற நிலை மாறி, தற்போது, 'மிட்ரா கிளிப்' பொருத்தும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அறுவை சிகிச்சையின்றி, தொடை நரம்பு வழியாக இச்சிகிச்சை அளிக்க வேண்டும்.


பரிந்துரை

இதை 45 நிமிடம் முதல், ஒன்றரை மணி நேரத்தில் செய்து விடலாம். இதுபோன்ற வால்வு பிரச்னையில், நோயாளி எந்த அளவுக்கு மோசமான நிலையில் இருந்தாலும், அவர்களுக்கு இந்த முறையில் சிகிச்சை அளிக்க முடியும்.தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டவருக்கு பல டாக்டர்கள் இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு என பரிந்துரைத்து உள்ளனர். ஆனால், அப்பல்லோவில் நவீன சிகிச்சை வாயிலாக, அறுவை சிகிச்சையின்றி குணப்படுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


சிகிச்சை பலன்

அப்பல்லோ மருத்துவமனை குழும துணை செயல் தலைவர் பிரீத்தா ரெட்டி கூறுகையில், ''இதய நோயாளிகளில் 10 சதவீதம் பேர், இதய செயலிழப்பால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு, 'மிட்ரா கிளிப்' பொருத்துதல் மிகவும் பாதுகாப்பானது.அதன்படி, மூன்று மாதங்களுக்கு மேலாக இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த 41 வயது நோயாளிக்கு 'மிட்ரா கிளிப்' பொருத்தி, சிகிச்சை பலன்களை நிரூபித்துள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X