பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: ஒரு செங்கலை கூட எடுக்க முடியாது

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :ஆர்.சுப்பு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:தமிழகத்தில் 40 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. ஏற்கனவே உள்ள 75 வழிகாட்டுதல்களை பயன்படுத்தி அறநிலைய துறை, அந்த நிலங்களை மீட்க வேண்டும் என, உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.கோவில் நிலம் தவிர,


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :ஆர்.சுப்பு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

தமிழகத்தில் 40 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. ஏற்கனவே உள்ள 75 வழிகாட்டுதல்களை பயன்படுத்தி அறநிலைய துறை, அந்த நிலங்களை மீட்க வேண்டும் என, உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.latest tamil news


கோவில் நிலம் தவிர, அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலை, நடைபாதை ஆகியவற்றிலும் கூட ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் அரசியல்வாதிகள் தான்!ஒரு இடத்தை ஆக்கிரமிப்பதற்கு தேவையானவை, ஒரு கோணி மற்றும் நான்கு ஆணிகள் ஆகியவை தான். அந்த இடத்திற்கு சில ஆண்டுகளில் அரசே பட்டா போட்டு, ஆக்கிரமிப்பாளருக்கு கொடுத்து விடும்.இதனால் ஆக்கிரமிப்புகளை தடுக்கவும் முடியவில்லை; ஒழிக்கவும் முடியவில்லை.

ஆக்கிரமிப்புகளை அகற்ற, நீதிமன்றம் பிறப்பிக்கும் கடுமையான உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசு, அதை கண்டுகொள்வதில்லை.தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாக ஏராளமான கடைகள் உள்ளன.அதை அகற்ற, மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் தலைமையில் அதிகாரிகள் சென்ற போது, தி.மு.க., - எம்.எல்.ஏ., நீலமேகம் எதிர்ப்பு தெரிவித்து, அந்த பணியை தடுத்தார்.இரண்டாவது நாள், மாநகராட்சி கமிஷனர் சரவணகுமார் நேரடியாக களம் இறங்கி, 'பொக்லைன்' இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றார்.


latest tamil news


மாநகர துணை செயலர் நீலகண்டன் உள்ளிட்ட தி.மு.க.,வினர் திரண்டு வந்து, ஆக்கிரமிப்பை அகற்றும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கமிஷனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.கமிஷனரும், ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் தோல்வியை தழுவி திரும்பி சென்றார்.புயல், பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர் ஏற்பட்டு, அந்த ஆக்கிரமிப்புகள் சரிந்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.ஆளுங்கட்சியின் ஆதரவோடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து, மாநகராட்சி நிர்வாகத்தாலோ, உயர் நீதிமன்ற உத்தரவுகளாலோ ஒரு செங்கல்லை கூட எடுக்க முடியாது என்பது தான் நிதர்சனம்!

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஆக-202102:44:37 IST Report Abuse
Prasanna Krishnan Hence temples should be made free from political slavery. This is what Sri Sadhguru Jakki Vasudev is suggesting. Better central government takes the charge of temples. Central force can be present while demolition of illegally built building in temple lands.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
05-ஆக-202120:51:52 IST Report Abuse
RajanRajan சரவணா குமார் ஒரு நேர்மையான தைரியமான திறமை மிக்க அதிகாரி என்பது அவருடைய சர்விஸ் ரெகார்ட். சரவணா குமார் கமிஷனராலே ஆக்கிரமிப்பை அகற்ற முடியவில்லை என்றால் திமுக ஆளும்கட்சி குறுக்கீடு மிக கடுமையாக தான் உள்ளது என்பதே அர்த்தம். மத்திய அரசு கட்டுப்பாட்டில் கோவில்கள் செல்லும் முன்பே திராவிடன் ஆட்டைய போட்டு முடிச்சுடணும்னு அனலாய் கொதிக்கிறான். எனவே மறுபடியும் திமுக இந்துக்களின் எதிரி கட்சி என்பதை உறுதி படுத்துகிறார்கள் என்பதே உண்மை. உசார் உசார்
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
05-ஆக-202119:14:36 IST Report Abuse
Dhurvesh விடுங்கள் நாம் எப்படி குஜராத்தில் எப்படி 1000 கோடி செலவு செய்து சுவர் எழுப்பினோம் அப்படி செய்து சரி செய்து விடுவோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X