பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி கமிஷனரிடம் வியாபாரிகள் சங்கம் மனு

Added : ஆக 05, 2021
Share
Advertisement
சென்னை: வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடியிடம், நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:சென்னையில் கூட்ட நெரிசல் அதிகமுள்ள, தி.நகர், கொத்தவால்சாவடி, வண்ணாரப்பேட்டை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதில்,

சென்னை: வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடியிடம், நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னையில் கூட்ட நெரிசல் அதிகமுள்ள, தி.நகர், கொத்தவால்சாவடி, வண்ணாரப்பேட்டை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில், வணிகர்கள் செய்யாத தவறுக்கு, குற்றஞ்சாட்டி, கடைஅடைப்புக்கு உத்தரவிடுவது ஏற்றுக் கொள்ள முடியாது. பொதுமக்கள் விழிப்புணர்வோடு, அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்கிறார்களா? என்பதை, அரசு அதிகாரிகள் உறுதி செய்து, முறைப்படுத்தினாலே தொற்றின் எண்ணிக்கையை குறைக்க முடியும். எனவே, மூடப்பட்ட பகுதிகளில், கடைகளை மீண்டும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X