சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குளிர்பானம் குடித்த சிறுமி பரிதாப பலி

Added : ஆக 05, 2021
Share
Advertisement
சாஸ்திரி நகர்: குளிர்பானம் குடித்த சிறுமி பலியான சம்பவம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.கல்பாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ், 40; இவரது மனைவி காயத்ரி, 34. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள். இளைய மகள் தாரணி, 13; அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இரண்டு வாரத்திற்கு முன், சகோதரிகள் இருவரும் பெசன்ட் நகர், ஓடைக்குப்பத்தில் உள்ள தாய்மாமன் விக்னேஷ் வீட்டுக்கு சென்றனர்.

சாஸ்திரி நகர்: குளிர்பானம் குடித்த சிறுமி பலியான சம்பவம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
கல்பாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ், 40; இவரது மனைவி காயத்ரி, 34. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள். இளைய மகள் தாரணி, 13; அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இரண்டு வாரத்திற்கு முன், சகோதரிகள் இருவரும் பெசன்ட் நகர், ஓடைக்குப்பத்தில் உள்ள தாய்மாமன் விக்னேஷ் வீட்டுக்கு சென்றனர்.
தாரணி அருகில் உள்ள ஒரு கடையில், குளிர்பானம் வாங்கி குடித்தார். வீட்டுக்குச் சென்ற சிறிது நேரத்தில், சிறுமிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.உறவினர்கள், அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தாரணி இறந்தார்.சாஸ்திரி நகர் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, உறவினர்கள், கடை உரிமையாளரிடம் விசாரிக்கின்றனர்.
சிறுமிக்கு உடல் ஓவ்வாமையா? அல்லது விஷம் கலக்கப்பட்ட குளிர்பானம் குடித்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற வகையில் போலீசார் விசாரிக்கின்றனர். இதற்கிடையே, பொன்னேரி, ஆத்துார் பகுதியில் இயங்கி வரும், குளிர்பான தயாரிப்பு ஆலையில், ஆர்.டி.ஓ., மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். குளிர்பான மாதிரிகளை சேகரித்த அதிகாரிகள், மறு உத்தரவு வரும் வரை, ஆலை இயங்க தடை விதித்தனர். அந்த ஆலை, தற்காலிகமாக மூடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X