குடியுரிமை திருத்த சட்டம்; மத்திய அமைச்சர் விளக்கம்

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி-''அண்டை நாடுகளை சேர்ந்த மேலும் சில சிறுபான்மையினருக்கு நம் நாட்டு குடியுரிமை வழங்கும் விதமாக, குடியுரிமை திருத்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் திட்டம், மத்திய அரசுக்கு இல்லை,'' என, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்தார்.கேள்விஅண்டை நாடான வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் துன்புறுத்தல்களுக்கு

புதுடில்லி-''அண்டை நாடுகளை சேர்ந்த மேலும் சில சிறுபான்மையினருக்கு நம் நாட்டு குடியுரிமை வழங்கும் விதமாக, குடியுரிமை திருத்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் திட்டம், மத்திய அரசுக்கு இல்லை,'' என, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்தார்.



latest tamil news



கேள்விஅண்டை நாடான வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் சிறுபான்மையினரான ஹிந்து, கிறிஸ்துவர், சீக்கியர் உள்ளிட்ட மதத்தினருக்கு நம் நாட்டு குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்த சட்டம், கடந்த 2019ல் பார்லி.,யில் நிறைவேறியது.'இந்த சட்டத்தின் கீழ், இலங்கைதமிழர்கள், பாகிஸ்தானில் வசிக்கும் அகமதியா முஸ்லிம்கள் ஆகியோருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும்' என, ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், 'குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ், அண்டை நாடுகளை சேர்ந்த மேலும் சில சிறுபான்மையினருக்கும் குடியுரிமை வழங்கும் எண்ணம், மத்திய அரசுக்கு உள்ளதா' என, கேரளாவை சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி., அப்துல் வகாப், ராஜ்யசபாவில் நேற்று கேள்வி எழுப்பினார்.


latest tamil news



வாய்ப்பில்லை

அதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியதாவது:குடியுரிமை திருத்த சட்டத்திற்கான விதிகளை வரையறுக்க, அடுத்த ஆண்டு ஜனவரி வரை மத்திய உள்துறை அமைச்சகம் கால அவகாசம் கோரியுள்ளது.விதிகள் வரையறுக்கப்பட்ட பின், இந்த சட்டம் நடைமுறைக்கு வரும். அதன் பிறகே தகுதியானவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க முடியும்.அண்டை நாடுகளை சேர்ந்த மேலும் சில சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் விதமாக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் எண்ணம் அரசுக்கு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
05-ஆக-202111:12:38 IST Report Abuse
Raj இந்தியாவில் மக்கள் தொகையை குறைக்க பெரும் நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில், அடுத்த நாட்டு சிறுபான்மையினருக்கு குடியுரிமை. இங்கு சொந்த நாட்டிலேயே, அகதிபோல் அன்றாடம் காய்ச்சிகளாக அடிபடை தேவைகளையே நிறைவேறி கொள்ள முடியாத பல கோடி பேர் இருக்க அவைகளை மேம்படுத்த அக்கறை காட்டாமல், மேலும் அகதிகளை உள்ளே விடுவது, இந்தியாவை மேலும் வறுமையின் பிடியில் தள்ளும்
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
05-ஆக-202109:55:14 IST Report Abuse
sundarsvpr குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாய் உள்ளது. இந்த சட்டம் வெளிநாட்டில் வாழும் நம் நாட்டு முஸ்லீம் ஹிந்து கிறிஸ்துவர் சீக்கியர் போன்றோருக்கு ஒரு வரப்பிரதாதம்
Rate this:
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
05-ஆக-202111:06:16 IST Report Abuse
Rajமுஸ்லீம்களுக்கு கிடையாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X