மின்னணு கழிவுகள் 4,000 கிலோ சேகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின்னணு கழிவுகள் 4,000 கிலோ சேகரிப்பு

Added : ஆக 05, 2021
Share
அடையாறு: அடையாறில், நலச்சங்கம் நடத்திய முகாமில் 4,000 கிலோ மின்னணு கழிவுகள் சேகரிக்கப்பட்டன.சென்னை மாநகராட்சியில் குப்பையை கையாள பல வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக, மின்னணு கழிவுகளை குப்பை தொட்டிகளில் போடாமல் தனியாக வாங்கி, பிரித்து கையாளப்படுகின்றன. அடையாறு, கஸ்துாரிபாய் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், மின்னணு கழிவுகளை சேகரிக்க இரண்டு நாள் முகாம்

அடையாறு: அடையாறில், நலச்சங்கம் நடத்திய முகாமில் 4,000 கிலோ மின்னணு கழிவுகள் சேகரிக்கப்பட்டன.
சென்னை மாநகராட்சியில் குப்பையை கையாள பல வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக, மின்னணு கழிவுகளை குப்பை தொட்டிகளில் போடாமல் தனியாக வாங்கி, பிரித்து கையாளப்படுகின்றன. அடையாறு, கஸ்துாரிபாய் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், மின்னணு கழிவுகளை சேகரிக்க இரண்டு நாள் முகாம் நடத்தியது.
இதில், பழைய, 'டிவி', பிரிட்ஜ், கணினி உள்ளிட்ட 4,000 கிலோ மின்னணு கழிவுகளை பொதுமக்கள் வழங்கினர். விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சிறுவர்களை கவர, 'ரோபோ' மற்றும் மின்னணு கழிவுகள் குறித்து, 'மனதுக்கு தோன்றியதை எழுதவும்' என்ற தலைப்பில், பொதுமக்கள் சி.டி.,யில் வாசகம் எழுதினர். சேகரித்த மின்னணு கழிவுகளை மாநகராட்சி அங்கீகரித்த நிறுவனத்திடம் வழங்கி உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X