சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'டிவி' சேனல் அலுவலகத்தில் தாக்குதல் ஏன்?

Added : ஆக 05, 2021
Share
Advertisement
ராயபுரம்: தனிப்பட்ட பகைக்காக, வாள், கேடயத்துடன் வந்து, தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியதாக, கைதான நபர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.கோவை, உப்பிலிப்பாளையம், இந்திரா கார்டன் சாலையைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 31. இவர், ராயபுரத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகத்திற்குள், வாள், கேடயத்துடன் புகுந்து, அங்குள்ள ஊழியர்களை மிரட்டினார். டேபிள், கண்ணாடி,

ராயபுரம்: தனிப்பட்ட பகைக்காக, வாள், கேடயத்துடன் வந்து, தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியதாக, கைதான நபர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
கோவை, உப்பிலிப்பாளையம், இந்திரா கார்டன் சாலையைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 31. இவர், ராயபுரத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகத்திற்குள், வாள், கேடயத்துடன் புகுந்து, அங்குள்ள ஊழியர்களை மிரட்டினார். டேபிள், கண்ணாடி, கணினிகளை அடித்து நொறுக்கினார்; ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து சென்று, அவரைக் கைது செய்தனர். விசாரணையில், தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் மூன்று அதிகாரிகளிடம் உள்ள, தனிப்பட்ட பகையை தீர்க்கவே, வாள், கேடயத்துடன் சென்று மிரட்டல் விடுத்ததாக, ராஜேஷ்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ராஜேஷ்குமாரின் தந்தை, கோவை மருத்துவமனையில், ஆர்.எம்.ஓ.,வாக இருந்து ஓய்வு பெற்றவர் என்பதும், ராஜேஷ்குமார் பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்தியவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X