பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விழிப்புணர்வு போட்டி: மக்களுக்கு மாநகராட்சி அழைப்பு

Added : ஆக 05, 2021
Share
Advertisement
சென்னை: கொரோனா தொடர்பான விழிப்புணர்வு போட்டியில் பங்கேற்க பொதுமக்களுக்கு, சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.இது குறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பு:சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஒரு வாரத்திற்கு, விழிப்புணர்வு பிரசாரங்கள், துண்டு பிரசுரங்கள் வழங்குதல், போட்டிகள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

சென்னை: கொரோனா தொடர்பான விழிப்புணர்வு போட்டியில் பங்கேற்க பொதுமக்களுக்கு, சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பு:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஒரு வாரத்திற்கு, விழிப்புணர்வு பிரசாரங்கள், துண்டு பிரசுரங்கள் வழங்குதல், போட்டிகள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சி சார்பில், இன்றும், நாளையும் கொரோனா தொடர்பான பல்வேறு போட்டிகள், 'ஆன்லைன்' வாயிலாக நடைபெற உள்ளன.
இதில், பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கலாம்.போட்டிகளில் பங்கேற்போர் https://chennaicorporation.gov.in/gcc/online-services/comp/home.jsp என்ற இணையதளத்தில் தங்கள் படைப்புகளை, குறித்த நேரத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த மூன்று படைப்புகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள், வரும் சுதந்திர தினந்தன்று வழங்கப்படும். கூடுதல் விபரங்களை, மாநகராட்சியின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X