பொது செய்தி

தமிழ்நாடு

நடமாடும் வாகனத்தில் 3,087 பேருக்கு தடுப்பூசி

Added : ஆக 05, 2021
Share
Advertisement
சென்னை: சென்னையில், நடமாடும் தடுப்பூசி வாகனத்தின் வாயிலாக, 3,087 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள, மாற்றுத்திறனாளிகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், கர்ப்பிணியர், பாலுாட்டும் தாய்மார்கள், காசநோய்

சென்னை: சென்னையில், நடமாடும் தடுப்பூசி வாகனத்தின் வாயிலாக, 3,087 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள, மாற்றுத்திறனாளிகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், கர்ப்பிணியர், பாலுாட்டும் தாய்மார்கள், காசநோய் பாதித்த நபர்களை பாதுகாக்க, மாநகராட்சி சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.
மேலும், குடிசை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 'ரோட்டரி' சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட, நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வாகனம், ஜூன் 29ம் தேதி முதல் பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகிறது. இந்த வாகனத்தில் இதுவரை, 2,477 பேருக்கு கோவிஷீல்டு, 610 பேருக்கு 'கோவாக்சின்' என, 3,087 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X