சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் கணவரிடம்  பண மோசடி 

Added : ஆக 05, 2021
Share
Advertisement
விருகம்பாக்கம்: விருகம்பாக்கம், மேற்கு நடேசன் நகர் ஐ.ஏ.எஸ்., குடியிருப்பைச் சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் கணவர் அன்பழகன், 58. இவர், சென்னை பல்கலை பேராசிரியராக பணியாற்றுகிறார்.இவரது மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், 'உங்கள் எஸ்.பி.ஐ., வங்கியின் பிரத்யேக மொபைல் போன் ஆப் 'யோனோ' கணக்கு காலாவதியாகிவிட்டது. உடனடியாக புதுப்பிக்க வேண்டும்' எனக்

விருகம்பாக்கம்: விருகம்பாக்கம், மேற்கு நடேசன் நகர் ஐ.ஏ.எஸ்., குடியிருப்பைச் சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் கணவர் அன்பழகன், 58. இவர், சென்னை பல்கலை பேராசிரியராக பணியாற்றுகிறார்.
இவரது மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், 'உங்கள் எஸ்.பி.ஐ., வங்கியின் பிரத்யேக மொபைல் போன் ஆப் 'யோனோ' கணக்கு காலாவதியாகிவிட்டது. உடனடியாக புதுப்பிக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
இதை நம்பிய அன்பழகன், அந்த நபர் கேட்ட வங்கி கணக்கு ரகசிய எண் மற்றும் ஓ.டி.பி., ஆகியவற்றை அளித்தார். சிறுது நேரத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து, 10 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து, அன்பழகன் அளித்த புகாரின் அடிப்படையில், விருகம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X