போலீசார் குடும்பத்தினர் 24,000 பேருக்கு மருத்துவ பரிசோதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீசார் குடும்பத்தினர் 24,000 பேருக்கு மருத்துவ பரிசோதனை

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021
Share
சென்னை: சென்னையில் பணிபுரியும் போலீசார், அவர்களின் குடும்பத்தாருக்கு, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, பிரபல தனியார் மருத்துவமனை உதவியுடன், மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.கொண்டித்தோப்பு மற்றும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள, காவலர் குடியிருப்பில், கமிஷனர் சங்கர் ஜிவால், மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். இதில், கண், காது, தொண்டை, ரத்த அழுத்தம், நீரிழிவு
போலீசார் குடும்பத்தினர் 24,000 பேருக்கு மருத்துவ பரிசோதனை

சென்னை: சென்னையில் பணிபுரியும் போலீசார், அவர்களின் குடும்பத்தாருக்கு, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, பிரபல தனியார் மருத்துவமனை உதவியுடன், மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

கொண்டித்தோப்பு மற்றும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள, காவலர் குடியிருப்பில், கமிஷனர் சங்கர் ஜிவால், மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். இதில், கண், காது, தொண்டை, ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் இ.சி.ஜி., உள்ளிட்ட பரிசோதனை செய்யப்படுகிறது. கமிஷனர் பேசியதாவது:

சென்னையில் உள்ள அனைத்து காவலர் குடியிருப்பு, பரங்கிமலை ஆயுதப்படை வளாகம் என, டாக்டர்கள் இரு பிரிவுகளாக சென்று, மருத்துவ முகாமை நடத்த உள்ளனர். போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தார் என, 24 ஆயிரம் பேருக்கு, மருத்துவ பரிசோதனை நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X