சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்: சென்னை

Added : ஆக 05, 2021
Share
Advertisement
மூதாட்டியரிடம் நுாதனமாக நகை பறிப்புபாண்டி பஜார்: தி.நகர், கண்ணம்மாபேட்டையைச் சேர்ந்தவர் சுலக் ஷணா, 72. இவர், நேற்று முன்தினம் தி.நகர் முப்பாத்தம்மன் கோவிலுக்கு சென்று, வடக்கு உஸ்மான் சாலை வழியாக வீட்டிற்கு நடந்து வந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர், இவ்வளவு நகைகள் அணிந்து சென்றால், திருடர்கள் பறித்து விடுவர் எனக் கூறினார். மேலும், நகைகளை கழற்றி வாங்கி, பேப்பரில்

மூதாட்டியரிடம் நுாதனமாக நகை பறிப்பு

பாண்டி பஜார்: தி.நகர், கண்ணம்மாபேட்டையைச் சேர்ந்தவர் சுலக் ஷணா, 72. இவர், நேற்று முன்தினம் தி.நகர் முப்பாத்தம்மன் கோவிலுக்கு சென்று, வடக்கு உஸ்மான் சாலை வழியாக வீட்டிற்கு நடந்து வந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர், இவ்வளவு நகைகள் அணிந்து சென்றால், திருடர்கள் பறித்து விடுவர் எனக் கூறினார். மேலும், நகைகளை கழற்றி வாங்கி, பேப்பரில் மடித்து அவரது பையில் வைத்து கொடுத்தார். சுலக் ஷணா சிறிது துாரம் சென்ற பின், பேப்பரை திறந்து பார்த்த போது, 9 சவரன் நகைகளுக்கு பதில், கற்கள் மட்டுமே இருந்தன. இது குறித்து சுலக் ஷணா அளித்த புகாரின் அடிப்படையில் பாண்டி பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.
*மாதவரம்: மாதவரம் பால்பண்ணை, ஜானவாஸ் தெருவைச் சேர்ந்தவர் பாலாமணி, 72. இவர், வீட்டருகே நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், மூதாட்டியின் 5 சவரன் செயினை பறித்து சென்றனர். இது குறித்து, மாதவரம் பால்பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.

போதை 'பவுடர்' பறிமுதல்
சென்னை: சென்னையில் டி.எச்.எல்., என்ற 'கூரியர்' நிறுவனம் வாயிலாக, மர்ம நபர்கள் ஆஸ்திரேலியாவுக்கு போதை 'பவுடர்' கடத்துவதாக மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு, கூரியர் வாயிலாக டிபன் பாக்சில் 'சூடோஎபிட்ரீன்' என்ற 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பவுடரை கடத்த முயன்ற பைசல், 45, பாஷா 48, ஆகியோரை கைது செய்தனர். இருவரும் போதை பவுடர் கடத்தலில் முக்கிய புள்ளியாக செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இவர்களின் கூட்டாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.

ஆவடியில் 1 டன் குட்கா பறிமுதல்

ஆவடி: ஆவடி அடுத்த மோரை வினோ நகரில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்தியதில், 1 டன் குட்கா சிக்கியது. இதுதொடர்பாக திருப்பதி, 29, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

சிறுவன் துாக்கிட்டு தற்கொலை

ஐ.சி.எப்.: ஐ.சி.எப்., டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சதீஷ், 35, என்பவரது மகன் ரித்திஷ், 10. நேற்று மதியம் 2:30 மணியளவில், குளிக்க சென்ற ரித்திஷ் வெகுநேரமாகியும் குளியல் அறையை விட்டு வெளியே வரவில்லை. சிறுவனின் அக்கா கிருபா, அங்கிருந்தோர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது, ரித்திஷ் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. ஐ.சி.எப்., போலீசார், உடலை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தற்கொலைக்கான காரணத்தை விசாரிக்கின்றனர்.

'பால்கனி' இடிந்து விழுந்து மூதாட்டி பலி
மயிலாப்பூர்: மயிலாப்பூர், பக்தவச்சலம் சாலை அருகே, அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பத்மஜா தேவி, 82. பால்கனியில் துணி காயவைக்க சென்றார். அப்போது திடீரென பால்கனி இடிந்து விழுந்ததில், அவர் படுகாயமடைந்தார். காவேரி மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்த தகவலை தெரிவித்தனர். மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

கடலில் ஆண் சடலம் மீட்பு

காசிமேடு: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 5வது வார்ப்பு அருகே, கடலில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்தது. தகவலறிந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்தவர் ஆந்திராவைச் சேர்ந்த மீனவராக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. படகில் மீன் பிடிக்கும் போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்து கடலில் வீசப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

குப்பை சேகரிப்பவரிடம் பணம் பறிப்பு

மயிலாப்பூர்: மயிலாப்பூர், சாந்தோம் தேவாலயம் அருகே நடைபாதையில் வசித்து வருபவர் சுரேஷ், 35; குப்பை சேகரித்து வாழ்பவர். இவர் கச்சேரி சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட் அருகே நடைபாதையில் அமர்ந்து இருந்தார். அங்கு, மதுபோதையில் வந்த மர்ம நபர், சுரேஷை கத்தியால் தாக்கி, அவரிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றார். தகவலறிந்த மயிலாப்பூர் போலீசார், பிரகாஷ், 28, என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து, கத்தி ஒன்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X