பொது செய்தி

இந்தியா

பள்ளிகளை திறக்க வேண்டாம்': வல்லுநர்கள் வலியுறுத்தல்

Added : ஆக 05, 2021
Share
Advertisement
பெங்களூரு: '‛கர்நாடகாவில், கொரோனா மீண்டும் அதிகரிப்பதால், தற்போதைக்கு பள்ளிகளை திறக்க வேண்டாம்,'' என, வல்லுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இது குறித்து, பெங்களூரு ஜெயதேவா இதய நோய் மருத்துவனை டாக்டர் மஞ்சுநாத் கூறியதாவது:மாநிலத்தில் பள்ளிகளை திறப்பதில் அவசரம் வேண்டாம். கேரளா, மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்று தீவிரமடைகிறது. எனவே, தற்போதைக்கு பள்ளிகளை திறப்பது நல்லதல்ல.

பெங்களூரு: '‛கர்நாடகாவில், கொரோனா மீண்டும் அதிகரிப்பதால், தற்போதைக்கு பள்ளிகளை திறக்க வேண்டாம்,'' என, வல்லுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து, பெங்களூரு ஜெயதேவா இதய நோய் மருத்துவனை டாக்டர் மஞ்சுநாத் கூறியதாவது:
மாநிலத்தில் பள்ளிகளை திறப்பதில் அவசரம் வேண்டாம். கேரளா, மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்று தீவிரமடைகிறது. எனவே, தற்போதைக்கு பள்ளிகளை திறப்பது நல்லதல்ல. இன்னும் இரண்டு வாரம் காத்திருந்து, சூழ்நிலையை கவனித்து முடிவு செய்ய வேண்டும். ஏனென்றால், இதற்கு முன் கேரளா, மஹாராஷ்டிராவில் தொற்று தீவிரமடைந்த இரண்டு வாரத்துக்கு பின், கர்நாடகாவில் தொற்று அதிகரிக்க துவங்கியது. இப்போதும் அப்படி நடக்கக்கூடும்.பள்ளிகளை திறக்கும் விஷயத்தில், அவசரம் வேண்டாம் என, வல்லுனர் குழுவும் கூட அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X