14 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த கைதிகளை மாநில அரசே விடுவிக்கலாம்: உச்ச நீதிமன்றம்

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (27) | |
Advertisement
புது டில்லி: உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று வழங்கிய ஒரு தீர்ப்பில் 14 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்த கைதிகளை கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் கூட மாநில அரசுகளே விடுவிக்கலாம், 14 ஆண்டுகளுக்குள் தண்டனை அனுபவித்த கைதிகளை விடுவிக்க கவர்னருக்கு அதிகாரம் உண்டு என கூறியுள்ளது.ஆயுள் தண்டனை கைதிகளை முன் கூட்டியே விடுவிக்கும் கொள்கை தொடர்பாக ஹரியானா மாநில அரசுக்கும்,

புது டில்லி: உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று வழங்கிய ஒரு தீர்ப்பில் 14 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்த கைதிகளை கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் கூட மாநில அரசுகளே விடுவிக்கலாம், 14 ஆண்டுகளுக்குள் தண்டனை அனுபவித்த கைதிகளை விடுவிக்க கவர்னருக்கு அதிகாரம் உண்டு என கூறியுள்ளது.latest tamil news


ஆயுள் தண்டனை கைதிகளை முன் கூட்டியே விடுவிக்கும் கொள்கை தொடர்பாக ஹரியானா மாநில அரசுக்கும், ராஜ்குமார் என்பவருக்குமான வழக்கின் மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது. இதனை விசாரித்த ஹேமந்த் குப்தா, ஏ.எஸ்.போபண்ணா அமர்வு, அரசியலமைப்பு பிரிவு 161 கீழ் கவர்னருக்கு உள்ள அதிகாரம் மூலம் 14 ஆண்டுகளுக்குள் தண்டனை அனுபவித்த கைதிக்கும் தண்டனையை குறைத்தல், மன்னிப்பு அளித்தல் ஆகியவற்றை வழங்கலாம். அதனை குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 433-ஏ கட்டுப்பாடுகள் தடுக்க முடியாது. இதனை கவர்னர் சொந்தமாக பயன்படுத்த முடியாது. மாநில அரசின் மூலம் செயல்படுத்தலாம் என கூறியுள்ளது.

மேலும் இந்த விஷயத்தில் ஒவ்வொரு தனிப்பட்ட வழக்கிற்கும் தனி உத்தரவு தேவையில்லை, அதே சமயம் எந்த பொது உத்தரவும் வழக்குகளின் குழுவை அடையாளம் காணும் அளவுக்கு தெளிவாக இருக்க வேண்டும். எனவே மாநில அரசின் கொள்கைகள் அரசியலமைப்பின் பிரிவு 161 மற்றும் பிரிவு 432, 433 மற்றும் 433-ஏ ஆகியவற்றின் கீழ் இரு சூழ்நிலைகளையும் உள்ளடக்கிய கூட்டு கொள்கைகளாகும் என தெளிவுப்படுத்தியுள்ளது.


latest tamil newsமாநில அரசு பிரிவு 432-ன் கீழ் அல்லது அரசியலமைப்பின் பிரிவு 161-ன் கீழ் மன்னிப்பு வழங்குவதற்கான கொள்கையை உருவாக்க முடியும். பிரிவு 433-ஏ இருந்தாலும், அரசியலமைப்பு பிரிவு 161-ன் கீழ் தண்டனை குறைப்பு மற்றும் விடுதலை செய்யும் அதிகாரத்தை கவர்னர் பயன்படுத்தலாம். விடுதலை மற்றும் தண்டனை குறைப்பு நடவடிக்கை அரசாங்கத்தின் முடிவுக்கு ஏற்ப இருக்கலாம். கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் கூட உத்தரவு பிறப்பிக்கலாம். இருப்பினும் நிர்வாக விதிகள் மற்றும் அரசியலமைப்புச் சட்ட நாகரிகம் காரணமாக, பிரிவு 161-ன் கீழ் விடுதலை என்றால் கவர்னரின் ஒப்புதலைப் பெறலாம் என்று தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raguram - madurai,இந்தியா
05-ஆக-202116:27:49 IST Report Abuse
raguram ஆயுள் சந்தா வாழ்நாள் முழவதும் பணம் செலுத்தபட்டதாகவா. ஆயுள்தண்டனை வாழ்நாள் முழவதும் தண்டனையா. சராசரி மனிதன் ஆயுள் தண்டனையா.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
05-ஆக-202114:17:57 IST Report Abuse
raja ஏதாவது புரியுதா? இந்த செய்தியில் உடன்பிறப்புகலே .... அந்த ஏழு பெற விடுதலை செய்யலாமா? செய்ய முடியாதா?னு பளிச்சுன்னு சொல்லுங்க எஜமான்... சட்ட அறிவு இந்த தமிழ் பாமரனுக்கு இல்லையே.....
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
05-ஆக-202115:11:21 IST Report Abuse
Rajaநானும் அதையே தான் நினைச்சேன். ஒரு சுக்கும் விளங்கல....
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
05-ஆக-202113:57:57 IST Report Abuse
vpurushothaman ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டணை பெற்றவர்களுக்கு இதைப் பொருத்திப் பார்க்கலாமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X