பொது செய்தி

இந்தியா

பெங்களூரு சிக்பேட்டில் போக்குவரத்தில் மாற்றம்

Added : ஆக 05, 2021
Share
Advertisement
பெங்களூரு: ஒயிட் டாப்பிங் பணிகள் நடப்பதால், பெங்களூரின் கூட்ஸ் ஷெட் சாலையில், இன்று முதல், பணிகள் முடியும்வரை வாகன போக்குவரத்துக்கு போலீஸ் துறை தடை விதித்துள்ளது. மாற்று சாலைகளில், வாகனம் செல்லலாம். இதனால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் வாய்ப்புள்ளது. பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:சிக்பேட் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட, கூட்ஸ்

பெங்களூரு: ஒயிட் டாப்பிங் பணிகள் நடப்பதால், பெங்களூரின் கூட்ஸ் ஷெட் சாலையில், இன்று முதல், பணிகள் முடியும்வரை வாகன போக்குவரத்துக்கு போலீஸ் துறை தடை விதித்துள்ளது. மாற்று சாலைகளில், வாகனம் செல்லலாம். இதனால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் வாய்ப்புள்ளது.
பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
சிக்பேட் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட, கூட்ஸ் ஷெட் சாலையில், மைசூரு சாலை மார்க்கெட் மேம்பாலம் அம்பேத்கர் டவுன் லேம்பிலிருந்து, டி.சி.எம்.ராயன் சாலை ஜங்ஷன் வரை, ஒயிட் டாப்பிங் பணி நடக்கிறது. எனவே, இன்று ஆக., 5 முதல், பணிகள் முடியும் வரை, இச்சாலையில் அனைத்து விதமான வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாகன பயணியருக்கு, மாற்று சாலை அடையாளம் காணப்பட்டுள்ளது. மைசூரு சாலையின், பாடி பில்டர் ஜங்ஷன் சர்வீஸ் சாலை வழியாக, சிர்சி ஜங்ஷனில் இடது புறம் திரும்பி, ஜெ.ஜெ.நகர் ஜங்ஷனுக்கு செல்லலாம்.அங்கிருந்து பின்னி மில் டேங்க் பன்ட் சாலை, வாழைக்காய் மண்டி ஜங்ஷனுக்கு சென்று, பின்னிமில் சதுக்கத்தில் வலது புறம் திரும்பி, ராயன் சாலை ஜங்ஷன், -கூட்ஸ் ஷெட் சாலை மூலம், ஷாந்தலா ஜங்ஷனை அடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X