பொது செய்தி

தமிழ்நாடு

வாள் வீச்சு வீராங்கனை பவானிதேவி முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
சென்னை: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவி, நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடந்து வரும், ஒலிம்பிக் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவி பங்கேற்றார். முதல் சுற்றில் வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றில் தோல்வியை தழுவி, பதக்கம் பெற முடியாமல்

சென்னை: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவி, நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.



latest tamil news



ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடந்து வரும், ஒலிம்பிக் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவி பங்கேற்றார். முதல் சுற்றில் வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றில் தோல்வியை தழுவி, பதக்கம் பெற முடியாமல் ஏமாற்றமடைந்தார்.

தமிழகம் திரும்பிய பவானிதேவி, நேற்று தலைமைச் செயலகத்தில், மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்தார். அப்போது தன்னுடைய வாளை, முதல்வருக்கு பரிசாக வழங்கினார். அதை பெற்ற முதல்வர், அந்த வாள் அடுத்த முறை விளையாட உறுதுணையாக இருக்கும் எனக் கூறி, அதை மீண்டும் அவருக்கே வழங்கினார்.


latest tamil news


முதல்வருடனான சந்திப்பு குறித்து, பவானிதேவி கூறியதாவது:ஒலிம்பிக்கில் நான் விளையாடியதை, முதல்வர் பார்த்து பாராட்டினார். இது என்னுடைய முதல் ஒலிம்பிக் போட்டி. தமிழகம் சார்பில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை மட்டுமல்லாமல், என் தாயையும், முதல்வர் பாராட்டியது மகிழ்ச்சியாக உள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, தமிழக அரசு எனக்கு பெரிதும் உறுதுணையாக இருந்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் பல உதவிகளை செய்தார். மின்சாரத் துறையில் பணியாற்றி வருவதால், மின் துறை அமைச்சரையும் சந்திக்க உள்ளேன். மத்திய அரசிடம் இருந்து, பல்வேறு வாய்ப்புகள் வருகின்றன. எனினும், தமிழகத்தில் இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். ஒலிம்பிக் சென்றால், பதவி உயர்வு வழங்கப்படும். எனவே, பதவி உயர்வை எதிர்பார்க்கிறேன். தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என, முதல்வர் உறுதி அளித்து உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
05-ஆக-202117:07:12 IST Report Abuse
DVRR "அப்போது தன்னுடைய வாளை, முதல்வருக்கு பரிசாக வழங்கினார்". அதுக்கு கைமாறாக ஏதானும் பெரிய தொகை டாஸ்மாக் அரசு கொடுக்கும் என்று பார்த்தல் அந்த வலையே திருப்பிக்கொடுத்துவிட்டாரே இந்த முதல்வர்.
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
05-ஆக-202111:44:32 IST Report Abuse
Svs Yaadum oore அவர் பதவி உயர்வை எண்ணித்தான் விளையாட சென்றார் .... அதில் எந்த தவறும் இல்லை ...வாழ்க்கை வாழ மன வலிமையுடன் உடல் வலிமையும் தேவை ...இவை இரண்டும் இது போன்ற விளையாட்டுகளால் உருவாகும்.. இவர் போன்றவர்கள் மற்ற மாணவர்களுக்கு முன் உதாரணம் ....இவருக்கு பதவி உயர்வு கொடுத்து அரசு விளையாட்டை ஊக்கிவிக்க வேண்டும் ....
Rate this:
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
05-ஆக-202111:22:04 IST Report Abuse
S.kausalya ஏன் இந்த வீராங்கனைபதவி உயர்வுக்காக இயங்கக் கூடாது? இந்த நிலை வர அவர் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார். அரசு உதவியோடும் அரசு இட ஒதுக்கீடு முறையிலும், அவர் இந்த இடத்தை அடைய வில்லை .சில நல்ல உள்ளம் படைத்த தன்னார்வ ஆர்வலர்கலால் அவர் இந்த நிலைக்கு முன்னேறி வந்துள்ளார். தமிழக தேர்வாளர்கள் இருந்திருந்தால், இந்தபிராமணர் ஒலிம்பிக் விளையாட்டிற்கு செல்ல முடியாது இருந்திருக்கலாம். அவர் அங்கு சென்று பங்கேற்றது பெரிய விஷயம்தானே பின்புலம் இல்லாமல் சாதித்தது பெரிய சாதனை தான்..அதை பாராட்ட மனம் இல்லாமல் ஏன் பதவி உயர்வு என்று கேட்கலாமா? தன்னுடைய சாதனைக்காக அந்த ஏழை வேறு என்ன எதிர்பார்க்க முடியும் பதவி உயர்வைத் தவிர.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X