பொது செய்தி

தமிழ்நாடு

காமாட்சியம்மன் கோவில் வீதியை கவனிங்க!

Added : ஆக 05, 2021
Share
Advertisement
குழாய் உடைப்பு; வீணாகுது குடிநீர்மாநகராட்சி, 99வது வார்டுக்கு உட்பட்ட, வெள்ளலுார் ரோடு, கோணவாய்க்கால் பாளையம், அரசு பள்ளி அருகில், குழாய் உடைப்பால், குடிநீர் வீணாகி சாலையில் ஓடுகிறது.- முத்துகுமார், கோணவாய்க்கால் பாளையம்.எப்.சி.ஏ., காலனியில் விளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 41வது வார்டுக்கு உட்பட்ட, காந்தி மாநகர், போலீஸ் குடியிருப்பு அருகில், எப்.சி.ஏ., காலனி, மூன்றாவது

குழாய் உடைப்பு; வீணாகுது குடிநீர்மாநகராட்சி, 99வது வார்டுக்கு உட்பட்ட, வெள்ளலுார் ரோடு, கோணவாய்க்கால் பாளையம், அரசு பள்ளி அருகில், குழாய் உடைப்பால், குடிநீர் வீணாகி சாலையில் ஓடுகிறது.- முத்துகுமார், கோணவாய்க்கால் பாளையம்.

எப்.சி.ஏ., காலனியில் விளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 41வது வார்டுக்கு உட்பட்ட, காந்தி மாநகர், போலீஸ் குடியிருப்பு அருகில், எப்.சி.ஏ., காலனி, மூன்றாவது வீதியில் உள்ள, மின் கம்பத்தில்(எண்: 17) கடந்த சில மாதங்களாக, விளக்கு எரிவதில்லை.- மாதங்கி, எப்.சி.ஏ., காலனி.

காந்தி நகரில் விளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 98 வது வார்டுக்கு உட்பட்ட, பொள்ளாச்சி ரோடு, சுந்தராபுரம் அடுத்த, காந்தி நகரில், எம்.எல்.ஏ., அலுவலகம் அருககில் உள்ள, மின் கம்பத்தில்(எண்: 17) கடந்த இரு மாதங்களாக, விளக்கு எரிவதில்லை.- ராமராஜ், காந்தி நகர்.

பாதியில் நிற்குது பணிமாநகராட்சி, 88வது வார்டுக்கு உட்பட்ட, குனியமுத்துார், கே.ஜி.கே.ரோடு செப்பனிடும் பணி, துவக்கப்பட்டு, ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது. தொடர்ந்து செப்பனிடும் பணி மேற்கொள்ளப்படாமல், கைவிடப்பட்டுள்ளது. சாலை முழுவதும் ஜல்லி கற்களாக இருப்பதால், பாத சாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.- செந்தில்வேலன், கே.ஜி.கே.நகர்.

தெரு நாய்கள் தொல்லை காந்திபுரம், டாடாபாத், நான்காவது வீதியில், சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்கள், போக்குவரத்துக்கு இடையூறாக, இங்கும் அங்கும் ஓடுவதுடன், இரு சக்கர வாகனங்களில் செல்வோரையும் துரத்தி கடிக்க வருகின்றன.- அனீத், டாடாபாத்.

மின் வாரியம் கவனிக்கணும்மாநகராட்சி, 58வது வார்டுக்கு உட்பட்ட, சிங்காநல்லுார், இந்திரா கார்டன் ரோட்டில் உள்ள, மின் கம்பத்தில் (எண்: 8) கடந்த ஒருமாதமாக விளக்கு எரிவதில்லை. இத்துடன், இப்பகுதியில் உள்ள மேலும் மூன்று கம்பங்களிலும் விளக்கு எரிவதில்லை. மின் வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இச்சாலை கும்மிருட்டாக காட்சியளிக்கிறது.- மகேந்திரன், சீனிவாசா கார்டன்.

மின் கம்பத்தை மாற்றணும்சிங்காநல்லுார், கணபதி நகர் முதல் வீதி, ஆர்.கே.கே.நகர் அருகில் உள்ள, மின் கம்பம் (எண்:23) சிதிலமடைந்துள்ளது. இதை அகற்றிவிட்டு, புது கம்பம் அமைக்க வேண்டும்.- ராஜ், ஆர்.கே.கே.நகர்.

வானத்துக்கு லைட் எதற்குமாநகராட்சி, 100வது வார்டுக்கு உட்பட்ட, போத்தனுார், அம்மன்புதுாரில் உள்ள, மின் கம்பத்தில், விளக்கு வானத்தை நோக்கி அமைந்துள்ளது. இதை சரி செய்து, சாலைக்கு ஒளி கொடுக்க வேண்டும்.- கவுதம், அம்மன்புதுார்.

சாக்கடை கால்வாய்க்கு சிலாப் மாநகராட்சி, 50வது வார்டுக்கு உட்பட்ட, சவுரிபாளையம், உடையாம்பாளையம், நேதாஜி வீதியில், திறந்த நிலையில் உள்ள, சாக்கடை கால்வாய்க்குள் குழந்தைகள் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இக்கால்வாய்க்கு சிலாப் அமைக்க வேண்டும்.- ராஜ்குமார், உடையாம்பாளையம்.

குப்பை அள்ளுவதில்லைமாநகராட்சி, 74வது வார்டுக்கு உட்பட்ட, சுங்கம் காமாட்சியம்மன் கோவில் வீதியில், சுகாதாரப் பணி மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால், குப்பை குவிந்துள்ளது. வீட்டு விலங்குகள் இவற்றை இழுத்து சாலையில் விட்டுச் செல்கின்றன; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- மாரியப்பன், ராமநாதபுரம்.

சாக்கடை கால்வாயை துார்வாரணும்மாநகராட்சி, 7வது வார்டுக்கு உட்பட்ட, தடாகம் ரோடு, இடையர்பாளையம், பாரி நகரில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இக்கால்வாயை துார் வார வேண்டும்.- விஜயகுமார், பாரி நகர்.

சாக்கடை கால்வாயை சீரமைக்கணும்மலுமிச்சம்பட்டி, குருவாயூர் நகரில், சாக்கடை கால்வாய் உடைந்துள்ளது. இக்கால்வாயை சீரமைக்க வேண்டும்.- சரவணன், மலுமிச்சம்பட்டி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X