பொது செய்தி

தமிழ்நாடு

உடைந்த பாலத்தை சீரமைக்க கோரிக்கை

Added : ஆக 05, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி நகராட்சியில் உடைந்த கால்வாய் பாலத்தின் தடுப்பு சுவரை சீரமைக்க பொதுமக்கள்கோரிக்கை விடுத்துஉள்ளனர். பரமக்குடி சவுராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளி அருகில் மிகப்பெரிய கழிவுநீர் வாறுகால் செல்கிறது. இதனருகில் நகராட்சி சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. வாறுகாலை கடந்து செல்ல கடந்த காலங்களில் பாலம் அமைக்கப்பட்டிருந்தது. 15 வருடங்களுக்கு முன்

பரமக்குடி : பரமக்குடி நகராட்சியில் உடைந்த கால்வாய் பாலத்தின் தடுப்பு சுவரை சீரமைக்க பொதுமக்கள்கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

பரமக்குடி சவுராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளி அருகில் மிகப்பெரிய கழிவுநீர் வாறுகால் செல்கிறது. இதனருகில் நகராட்சி சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. வாறுகாலை கடந்து செல்ல கடந்த காலங்களில் பாலம் அமைக்கப்பட்டிருந்தது. 15 வருடங்களுக்கு முன் தடுப்புச்சுவருடன் கூடிய சிமென்ட் பாலம் அமைக்கப்பட்டது. இதன் வழியாக பள்ளி மாணவர்கள் செல்வதுடன், உரப்புளி ஊராட்சி சுந்தர் நகரில் வசிக்கும் மக்கள் பாலத்தை பயன்படுத்துகின்றனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன் வாறுகாலை சுத்தம் செய்ய நகராட்சி இயந்திரம்வந்துள்ளது. அப்போது தடுப்புச்சுவரின் மீது இயந்திரம் உரசி பாலத்தின் ஒரு பகுதி சாய்ந்தது. இதனால் பாலத்தின் மீது செல்லும் டூவீலர் ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது.பாலத்தின் தடுப்பு சுவரை கட்டி மக்களை ஆபத்தில் இருந்து காக்க நகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X