பொது செய்தி

தமிழ்நாடு

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம்

Added : ஆக 05, 2021
Share
Advertisement
கோவை : கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால், பெற்றோரை இழந்த 5 குழந்தைகளுக்கு, தலா 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதி, நேற்று வழங்கப்பட்டது. கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த, குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம், வைப்புத்தொகையாக வழங்கப்படும் என்று, தமிழக அரசு அறிவித்தது.இதன்படி, கோவை மாவட்டத்தில் பெற்றோரை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் 5

கோவை : கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால், பெற்றோரை இழந்த 5 குழந்தைகளுக்கு, தலா 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதி, நேற்று வழங்கப்பட்டது.

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த, குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம், வைப்புத்தொகையாக வழங்கப்படும் என்று, தமிழக அரசு அறிவித்தது.இதன்படி, கோவை மாவட்டத்தில் பெற்றோரை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் 5 குழந்தைகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதிக்கான ஆணையை, கலெக்டர் சமீரன் நேற்று வழங்கினார்.'இந்த வைப்பு நிதி, குழந்தைகள் 18 வயது நிறைவடையும்போது, அவர்களுக்கு வட்டியோடு சேர்த்து வழங்கப்படும்' என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தை நல பாதுகாப்பு அலுவலர் சுந்தர் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X